பாகிஸ்தான் மற்றும் லாஹுர் லயன்ஸ் அணியின் சலக துறைவீரர் மொஹமட் ஹபீஸின் பந்துவீச்சு குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் லீக் இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்காவின் டொல்பின்ஸ் அணிக்கெதிரான நேற்றுமுன்தினம் போட்டியின் பின்னர் நடுவர்கள் இதுதொடர்பில் முறையிட்டுள்ளனர்.
இதேவேளை டொல்பின்ஸ் அணியின் சூழற்பந்துவீச்சாளர் பிறிநிலன் சுப்ராயனின் பந்துவீச்சு தொடர்பிலும் நடுவர்கள் முறையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இருவரும் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடலாம் என்பதுடன் மீண்டும் பந்துவீச்சு தொடர்பில் முறைப்பாடு செய்யப்படின் இருவருக்கும் இந்த தொடரில் பந்துவீச தடைவிதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment