முஸ்லிம் கட்சிகள் சரியான தீர்மானத்துக்கு வரவேண்டும் - அநுரகுமார திஸாநாயக்க
Monday, September 29, 20140 comments
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் சகல தரப்பினரும் உள்ளனர். இந்நிலையில் முஸ்லிம் கட்சிகள் சரியான தீர்மானத்துக்கு வரவேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கு சரியான சந்தர்ப்பத்தை அரசாங்கத்திற்குள் இருப்பவர்களும் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தவேளையில் அனைவரும் இணைந்து பலமான எதிரணியை உருவாக்க வேண்டும். இதற்கு அடித்தளம் இடப்படுமாயின் தமது ஆதரவை வழங்க தயார் எனவும் அநுரகுமார திஸநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அரசாங்கத்துடன், இணைந்திருக்கும் முஸ்லிம் கட்சிகளும் தற்போது சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment