பின்லேடனின் மருமகனுக்கு ஆயுள் தண்டனை
Wednesday, September 24, 20140 comments
அல் கைதா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் மருமகன் சுலைமான் அபு கெய்த்திற்கு நியூயோர்க் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி நேற்று (23) தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்கர்களை கொல்ல திட்டமிட்டமை, தீவிரவாதிகளுக்கு உதவியமை உள்ளிட்ட குற்றங்களுக்காக இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வசித்து வரும் அவர் அமெரிக்கர்களை கொலை செய்ய திட்டமிட்டது, தீவிரவாதிகளுக்கு உதவியது உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டார்.அவர் மீதான வழக்கு நியூயோர்க் நகரின் மன்ஹட்டன் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.
அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையத்தை அல் கொய்தா தீவிரவாதிகள் விமானம் மூலம் தாக்கியதில் சுமார் 3 ஆயிரம் பேர் பலியான வீடியோவை பார்த்து சுலைமான் மகிழ்ச்சி அடைந்தது நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த தாக்குதல் நடந்த அன்று மாலை சுலைமான் ஆப்கானிஸ்தானில் உள்ள குகையில் ஒசாமாவை சந்தித்துள்ளார். அப்போது இந்த தாக்குதல்களை நாம் தான் நடத்தினோம் என்று ஒசாமா சுலைமானிடம் தெரிவித்துள்ளார்.
அல் கைதா சார்பில் பிரச்சாரங்கள் செய்த சுலைமான் ஒசாமாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment