நிபந்தனையுடனேயே மு.கா. வை இணைக்க வேண்டும் : ஹரீன் பெர்னாண்டோ
Thursday, September 25, 20140 comments
நாட்டில் எதிர்காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே. கட்சியுடன் இணைய விரும்பினால் நிபந்தனைகளுடனேயே இணைத்துக்கொள்ள வேண்டும் என ஊவா மாகாணசபைக்குத் தெரிவான உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
பிட்டகோட்டேயிலுள்ள சிறிகொத்தாவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஊவா மாகாணசபை ஐ.தே.கட்சி உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
எனது எம்.பி. பதவியை துறந்து ஊவா மாகாண சபையில் போட்டியிட்டதன் மூலம் எமது கட்சியை ஒன்றுமைப்படுத்த முடிந்துள்ளது மட்டுமன்றி கட்சியை வெற்றிப் பாதைக்கு திருப்ப முடிந்துள்ளது.
எனவே, இது எனக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இனி எமது ஒற்றுமையை பாதுகாத்துக் கொண்டு எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுக்க வேண்டும்.
இதன்போது, ஜே.வி.பி. மற்றும் சரத்பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சிகளுக்கு எம்மோடு இணைவதற்கான அழைப்பை விடுக்க வேண்டும்.
அதேவேளையில் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் இ.தொ.கா. மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் எம்மோடு இணைந்து போட்டியிட விரும்பினால் முன்னைய காலங்களை போன்று இணைத்துக் கொள்ளக் கூடாது. மாறாக நிபந்தனைகள் விதிக்கப்பட்டே இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
ஐ.தே. கட்சி தற்போது வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. எனவே, கட்சியின் செயற்குழு இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஐ.தே. கட்சி தனித்து போட்டியிட்டே இவ்வாறான வாக்குகளை பெற்றதோடு எமது வாக்குகளும் 100 க்கு 45 வீதம் அதிகரித்துள்ளது. அதேவேளை அரசாங்கத்தின் வாக்குகள் பாரியளவில் குறைந்துள்ளதோடு வீழ்ச்சி கண்டுள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment