ஹரீனின் குழுவினர் மீது குண்டர்கள் கொலைவெறி தாக்குதல்
Monday, September 22, 20140 comments
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைபெற்று சாதணைபடைத்த ஹரீன் பெனாண்டோ மீது குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் சற்று முன்னர் பதுளை, ஹாலி-எல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற ஹரீன், இன்று தனது ஆதரவாளர்களை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து நன்றி தெரிவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் தனது குழுவினருடன் பயணித்த வாகனம் மீது ஹாலி-எல பகுதியில் கொலைவெறித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் குண்டர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹாலி-எல பொலிஸ் காவலரணுக்கு அருகாமையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ள போதிலும், பொலிசார் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிய வருகின்றது.
இச்சம்பவத்தில் ஹரீன் பெர்னாண்டோ பயணித்த வாகனம் உட்பட மூன்று வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. எனினும் காயமடைந்தவர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment