ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் சஜித் பிரேமதாஸ நாளைய தினம் நியமிக்கப்படவுள்ளதாக ஐக்கிய
தேசியக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கட்சியின் சிரேஸ்ட உப தலைவராக மொனராகலை மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் கட்சியின் பொருளாளராக தேசிய பட்டியல்
பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவும் நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு பதுளையில் அதிகூடிய
விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனை படைத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
ஹரேன் பெனாண்டோவுக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்படவுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சிக்காக அவர் செய்த அர்ப்பணிப்பை கௌரவப்படுத்தும்
வகையில் ஹரேன் பெனாண்டோவுக்கு முக்கிய பதவி வழங்கப்படவுள்ளதாக கட்சியின்
உள்ளகத் தகவல்கள் குறிப்பிடுகின்றது.
நாளை (23) நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த நியமனங்கள் வழங்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரதித் தலைவராவது உறுதி
Monday, September 22, 20140 comments
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment