ஹஜ் பயணிகள் சென்ற பஸ் மீது தாக்குதல்
Sunday, September 28, 20140 comments
ஹஜ் கமிட்டியிலிருந்து விமான நிலையத்திற்கு ஹஜ் யாத்ரீகர்கள் பயணித்த பஸ் மீது வன்முறை வெறியாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டதில் பேருந்து சேதமடைந்து, கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்று சென்னையில் இடம்பெற்றுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வெளியான நிலையில், தமிழகத்தில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதன்போதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் யாத்ரீகர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைவரும் பத்திரமாக விமான நிலையம் வந்தடைந்து விமானத்தில் மக்காவிற்கு பயணித்துள்ளனர்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment