மிகவும் மோசமான மாகாணசபைத் தேர்தல் இதுவே!
Monday, September 22, 20140 comments
அண்மையில் நடைபெற்ற மாகாணசபைத் தோதல்களில் மிகவும் மோசமான மாகாணசபைத் தேர்தலாக நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த ஊவா மாகாணசபைத் தேர்தலை கருத முடியும் என கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு அறிவித்துள்ளது.
அரச சொத்து துஷ்பிரயோகம் மற்றும் தேர்தல் வன்முறைகள் அதிகளவில் இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலாகவே இந்த தேர்தலை குறிப்பிட வேண்டுமென அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களின் பொது சொத்து பயன்பாடு அடக்குமுறைகள் பயன்படுத்தப்பட்ட போதிலும், இந்த அளவிற்கு வன்முறைகளோ அடக்குமுறைகளோ பயன்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் வாகனங்களில் சஞ்சரித்து தேர்தல் பீதியை அதிகரித்தனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தியானத்திற்கான சில் ஆடை, தேங்காய் மற்றும் பணம் முதலான பல்வேறு பொருட்கள் இலஞ்சமாக வழங்கப்பட்டு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். மோசமான முறையில் பொதுச் சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சட்டத்தை அமுல்படுத்த முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடைபெற்று முடிந்த தேர்தலை சுயாதீனமானதும் நீதியானதுமான தேர்தலாக கருதப்பட முடியாது என ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment