பொதுபலசேனா – '969' அமைப்புக்கள் இணைந்து செயற்படும் - விராது
Sunday, September 28, 20140 comments
இலங்கையிலுள்ள பொதுபலசேனா அமைப்பு மற்றும் தன்னால் உருவாக்கப்பட்ட மியன்மாரின் 969 அமைப்பு ஆகியன இணைந்து செயற்படும் என மியன்மாரின் அசின் விராது தேரர் தெரிவித்தார்.
முழு உலகத்தில் பௌத்த சமயத்தினை பாதுகாப்பதற்காக இந்த இரண்டு அமைப்புக்களும் இணைந்து செயற்படும் என அவர் குறிப்பிட்டார்.
"ஜிஹாத் அமைப்பினாலேயே இன்று முழு உலகிலும் பாரிய பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இவர்களினாலேயே மத மாற்றம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகின்றது" அவர் கூறினார்.
சுகதாஸ உள்ளக அரங்கில் தற்போது இடம்பெறும் பொதுபலசேனா அமைப்பின் மகா சங்க மாநாட்டில் உரையாற்றும் போதே அசின் விராது தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment