முஸ்லிம்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொள்வதில் ஜனாதிபதியையே நம்பியிருக்கிறார்கள். ஊவா தேர்தல் முடிவுகள் இதனையே தெரிவிக்கின்றன என சுற்றாடல் துறை பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் தெரிவித்தார்.
ஊவா முஸ்லிம்கள் முஸ்லிம் பிரதி நிதித்துவத்தையே நிராகரித்திருக்கிறார்கள். ஐக்கிய தேசிய கட்சியில் இருவரும் ஜே.வி.பி. யில் இருவரும் மற்றும் இரட்டை இலைச் சின்னத்தில் முஸ்லிம்களும் போட்டியிட்டும் ஒரு பிரதி நிதித்துவம் கூட கிடைக்கவில்லை.
முஸ்லிம் வாக்காளர்கள் நிலை தடுமாறாது அரசுக்கே ஆதரவளித்துள்ளார்கள். இதனை ஜனாதிபதி உணர்ந்து கொண்டுள்ளார். எனவே, வெற்றிலைக்கு வாக்களித்து வெற்றியடையச் செய்த முஸ்லிம்கள் அரசாங்கத்தின் மீது தொடர்ந்தும் நம்பிக்கை கொள்ள முடியும்.
வெற்றிலையை வெற்றியடையச் செய்த முஸ்லிம் மக்களுக்கு நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
Post a Comment