மாவனல்லை நகரில் இன்று ஏற்பட்ட திடீர் தீ காரணமாக நகரில் உள்ள சில வர்த்தக நிலையங்கள் அழிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ இன்று புதன்கிழமை முற்பகல் பரவ தொடங்கியதாக பொலிஸார் கூறினர். மாவனல்லை நகர சபையின் தீயணைப்பு படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த தீயில் பிளாஸ்டிக் பொருட்களை விற்கும் விற்பனை நிலையம், புத்தகசாலை, உணவு விடுதிகள் என 17 வர்த்தக நிலையங்கள் அழிந்துள்ளன. தீ பரவியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவனல்லை நகரில் பெரும்பான்மையான முஸ்லிம் மக்களே வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு எதிராக பொதுபல சேனா அண்மைய காலமாக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், நாசவேலை காரணமாக தீ ஏற்பட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Post a Comment