பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் ஐ.தே.க. வில் இணைவு
Thursday, September 25, 20140 comments
மௌபிம பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டிரான் அலஸ் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் பிரதித் தலைவரின் அழைப்பின் பேரில் அவர் இவ்வாறு அந்த கட்சியில் இணையவுள்ளார்.
டிரான் அலஸ், ஜனநாயக கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்து வருகிறார்.
பாடசாலை காலத்தில் இருந்தே சஜித் பிரேமதாசவின் நெருங்கிய நண்பரான டிரான் அலஸ், ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்டிருந்த தலைமைத்துவ நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டதுடன் அதன் பயனாக சஜித் மீண்டும் கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதற்காக நேரடியாக நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் டிரான் அலஸ் ஆகியோர் மீது ஊடகங்கள் விமர்சனங்களை முன்வைத்திருந்தன.
இவ்வாறான விமர்சனங்களுக்கு மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஐக்கியத்திற்காக பாடுபட்டதன் காரணமாக டிரான் அலஸை பொரளை தொகுதியின் அமைப்பாளராக நியமிக்க கட்சியின் தலைவர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment