புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் ஒக்டோபர் ஆறாம் திகதி திங்கட்கிழமை இலங்கை வாழ் முஸ்லிம்கள் கொண்டாடுமாறு பிறைக்குழு அறிவித்துள்ளது.
இதனிடையே சவூதி அரேபியாவில் ஹஜ்பெருநாளுடைய தினமாக ஒக்டோபர் மாதம் நான்காம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது.
புனித துல்ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப் பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய கலாசார திணைக்களம், ஷரீஆ கவுன்ஸில், தக்கியாக்கள் மற்றும் சாவியாக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது நாட்டின் எந்தப் பகுதியிலும் புனித துல்ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப் பிறை தென்பட்டதாக அறிவிக்கப்படவில்லை. இதனால் புனித துல்ஹஃதா மாதத்தினை 30 நாட்களாக பூர்த்தி செய்யுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிவித்துள்ளது.
அத்துடன் இலங்கை வாழ் முஸ்லிம்கள் புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும்; ஒக்டோபர் ஆறாம் திகதி திங்கட்கிழமை கொண்டாடுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்தது.
இதனால் இலங்கையில் அரபா தினம், ஒக்டோபர் ஐந்தாம் திகதி ஞாயிற்றுக்கிழமை எனவும் அகிலஇலங்கை ஜம்இய்யதுல் உலமா குறிப்பிட்டது. ஏற்கனவே நாட்காட்டியில் புனித ஹஜ் பெருநாள் எதிர்வரும் ஒக்டோபர் ஐந்தாம் திகதி என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment