கிழக்குமாகாண சபை உறுப்பினராக லாஹிர் சத்தியப்பிரமாணம்!
Sunday, September 7, 20140 comments
கிழக்குமாகாண சபை உறுப்பினராக மூதூரை சேர்ந்த சிரேஷ்ட்ட சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் கிழக்குமாகாணஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான்விஜேவிக்ரம முன்னிலையில் கடந்த 05 ஆம் திகதி சத்தியப்பிமாணம் செய்துகொண்டார்.
அண்மையில் காலஞ்சென்ற கிழக்குமாகாண சபை முன்னாள் உறுப்பினரும் பிரபலசமூகசேவையாளருமாகிய எஸ்.எம் ஹஸன் மௌலவியின் வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2012 இல் நடைபெற்ற கிழக்குமாகாண சபைத்தேர்தலின் போது லாஹீர் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்டு 10710 வாக்குகளினைப்பெற்று அக்கட்சி சார்பில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மூதூர் பிரதேசத்திற்கு இதுவரை குறையாக இருந்தமாகாண சபை உறுப்பினர் பதவி இதன் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது. புதிதாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட லாஹிரை ஆளுநர் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக், கிழக்குமாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், மாகாணஅமைச்சர்களான உதுமாலெப்பை, மன்சூர், தவிசாளர் ஆரியவதி கலப்பதி உட்பட பலரும் வாழ்த்தினர். இந்நிகழ்வு கிழக்குமாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
Post a Comment