அளுத்கம விவகாரத்தை விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்
Sunday, September 7, 20140 comments
அளுத்கம, தர்கா நகர், பேருவளை சம்பவம் தொடர்பிலான சகல மனுக்களையும் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் இந்த விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.
அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராகவே இவ்வாறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்ற நீதியரசர்களான கே.ஸ்ரீபவன், புவனேக அலுவிஹார மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழாம் இந்த மனுக்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தியிருந்தது.
இந்த சம்பவங்களுக்கு சில நிறுவனங்கள் பொறுப்பு என சட்ட மா அதிபரின் சார்பில் நீதிமன்றில் ஆஜரான பிரதி சொலிசுட்டர் ஜெனரல் சவேந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நிறுவனங்களிடமிருந்து ஏதேனும் நிவாரணங்களைக் கோராது வெறுமனெ குற்றச்சாட்டுக்களை சுமத்துவது நியாயமாகாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும், பிரதி சொலிசுட்டர் ஜெனரலின் வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் மட்டுமே சுமத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment