வெட்கம்: அரசின் பங்காளி முஸ்லிம் கட்சிகளை மக்கள் விரட்டியடிப்பு
Sunday, September 21, 20140 comments
பதுளை மாவட்டத்தில் அரசின் பங்காளி முஸ்லிம் கட்சிகளின் கூட்டணியை மக்கள் படுதோல்வி அடையச் செய்து மக்கள் விரட்டியடுத்துள்ளனர்.
அரசின் பங்காளி கட்சிகளான அமைச்சர் ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரஸும் அமைச்சர் ரிஷாடின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து ஜனநாகய ஐக்கிய முன்னணியின் இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட்டன. குறித்த மாவட்ட முஸ்லிம் மக்களின் பாதுகாப்பையும் தனித்துவத்தையும் காப்பதாக கூறி களத்தில் குதித்த அக்கட்சிகளை மக்கள் புறந்தள்ளியுள்ளனர்.
பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு செல்லும் வாக்குகளை தடுக்க அரசு மேற்கொண்ட திட்டத்தை நடைமுறைப்படுத்த களத்தில் இறங்கியவர்களுக்கு மக்கள் சிறந்த பாடத்தை புகட்டியுள்ளனர்.
2009 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் 4150 வாக்குகளை பெற்றது. இந்நிலையில் இம்முறை அ.இ.ம.கா மற்றும் மலையக முஸ்லிம் கவுன்சில் ஆகியவற்றுடன் கூட்டிணைந்து போட்டியிட்ட அக்கட்சி 5045 வாக்குகளையே பெற்றது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment