சஊதியில் திருமணம் முடிக்க சாரதி அனுமதிப்பத்திரம் கட்டாயம்..?
Monday, September 8, 20140 comments
சஊதி அரேபியாவில் விவாகரத்தை தடுக்க திருமணம் முடிப்பதற்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை கட்டாயமாக்கும் புதிய திட்டத்தை கொண்டுவருதற்கு நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
சஊதி நீதி அமைச்சு ஆய்வு செய்துவரும் புதிய திட்டத்திற்கு அமைய, திருமணத்திற்கு பின் சாரதி அனுமதிப்பத்திரத்தை பறிமுதல் செய்வதற்கு வாய்ப்புள்ளவாறு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருமணம் முடிக்கும் முன்னர் திருமண ஜோடி திருமண வாழ்வு தொடர்பான பயிற்சி முகாமில் பங்கேற்பதும் கட்டாயமாக்கப்படவுள்ளது.
சஊதியில் விவாகரத்தை குறைக்க, முன்னர் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்த நிலையிலேயே புதிய முயற்சி மேற்கொள் ளப்படுவதாக அங்கிருக்கும் குடும்ப ஆலோசகரான அப் துல் சலாம் அல் சக்பாய் குறிப்பிட்டுள்ளார்.
அரசு திருமணத்திற்கு முன்னர் திருமண ஜோடியிடம் மருத்துவ சோதனையை மேற் கொண்டு வந்தது. ஆனால் விவாகரத்திற்கும் மருத்துவ சோதனை முடிவுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரியவந்தது. அண்மைய ஆண்டுகளில் சஊதியில் விவாகரத்து எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது அரசுக்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. திருமணத்திற்கு பின்னர் பெண்கள் தொழில்புரிய கணவர்மார் நிராகரிப்பது அல்லது மனைவியின் சம்பளத்தை கணவர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அங்கு இடம்பெறும் பெரும்பாலான விவாகரத்துகளுக்கு காரணமென சஊதி ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment