முகத்தை மறைத்துக்கொண்டு தேர்தலில் வாக்களிக்க முடியாது - பிரதி தேர்தல் ஆணையாளர்
Friday, September 12, 20140 comments
முகத்தை மறைத்துக்கொண்டு தேர்தலில் வாக்களிக்க முடியாது என பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம். முகம்மத் தெரிவித்தார்.
ஊவா மாகாண சபை தேர்தல் தொடர்பாக பதுளை மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரி அசங்க ரத்னாயக்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒவ்வொருவரும் தமது ஆளடையாளத்தை கட்டாயமாக நிரூபிக்க வேண்டும். முகத்தை மறைத்துக் கொண்டு வரும் பெண்கள் பெண் அதிகாரிகள் மூலம் ஆளடையாளம் உறுதி செய்யப்பட்ட பின்னரே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
கடந்த தேர்தலின் போது நடைமுறைப்படுத்தப்பட்டது போன்று இம்முறையும் ஆண்களும் பெண்களும் ஒரே வரிசையில் சென்றே வாக்களிக்க வேண்டும் என்றார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment