நண்பரின் தோழியை துஸ்பிரயோகித்த இலங்கையர் - அரபு இராச்சியத்தில் சம்பவம்
Sunday, September 14, 20140 comments
ஐக்கிய அரபு ராஜ்சியத்தில் தமது நண்பர் ஒருவரின் தோழியை அச்சுறுத்தி பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 23 வயதான இலங்கையர் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
ஜபால் அலி பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கத்தியை காட்டி அச்சுறுத்தி, தமது நண்பர் ஒருவரின் தோழியை அவர் இவ்வாறு பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக நேற்றையதினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது சாட்சி வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் பெலரூசை சேர்ந்த 23 வயதான யுவதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைதான இலங்கையருக்கு எதிராக அச்சுறுத்தல், பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத மதுபாவனை ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவரது வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment