UNP - NFGG அரசியல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து; ஊவா தேர்தலில் இணைந்து செயற்படும்
Friday, August 22, 20140 comments
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட நல்லாட்சிக்கான தேசிய முன்னணி புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டது.
இதற்கமைய ஐ.தே.கட்சி பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் நஜா மொஹமட் ஒப்பந்த ஆவணங்களை பறிமாற்றிக்கொண்டனர்.
இந்நிகழ்விற்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் தலைமைத்துவ சபைத்தலைவர் கரு ஜெயசூரிய, பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, தேசிய அமைப்பாளர் தயா கமகே, தவிசாளர் கபீர் ஹாசிம், மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபீர் ஹாஜியார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்(PMGG), நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணி, ஆய்வுக்கும் கலந்துரையாடலுக்குமான மையம் ஆகியவை இணைந்த கூட்டணியான நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் சார்பில் அதன் செயலாளர் அஷ்ஷெய்க் நஜா முஹம்மத், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபைத்தலைவர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் (நளீமி) வடமாகாணசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப் (நளீமி), காத்தாண்குடி நகர சபை உறுப்பினர்களான அஷ்ஷெய்க் எஸ்.எச்.பிர்தௌஸ் (நளீமி), சபீல் (நளீமி) உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
மேற்படி, கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் தேசிய ஒற்றுமை நல்லாட்சியை ஏற்படுத்தல், இனவாத பிரச்சாரங்களை முறியடித்தல், ஊழல் மோசடி மற்றும் பொது உடைமைகளை சட்ட முரணாக பிரயோகித்தலுக்கு எதிராக செயற்படல், அஷ்ஷெய்க் அத்தோடு ஊவா மாகாண சபை தேர்தல் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற உதவல், போன்றவை அடங்கிய ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டனர்.
மேலும், எதிர்வரும் ஊவா மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக்காக உழைக்கவுள்ளனர்.
இது தொடர்பாக தலைமைத்துவ சபை தலைவர் கரு ஜெயசூரிய குறிப்பிடுகையில்;
தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தவே ஐ.தே.கட்சி முயலுகிறது. ஐ.தே.கட்சிக்கு முஸ்லிம்களின் ஆதரவு அதிகமாக காணப்படுகின்றது. எனவே நல்லாட்சிக்காக நாங்கள் போராட தயாராக உள்ளோம் என்றார்.
இதேவேளை, NFGGயின் செயலாளர் , ஐ.தே.கவுடனான இந்த முதலாவது பேச்சிவார்த்தை திருப்திகரமாக அமைந்தது. எங்களுடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டமை ஒரு வரவேற்கத்தக்கதாகும். மட்டுமன்றி எதிர்வரும் காலங்களில் ஐ.தே.கவுடன் இணைந்து செயற்படுவது தொடர்பிலான பேச்சிவார்த்தைகளில் ஈடுபடவுள்ளோம் என 'நம்மவனு'க்கு தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment