ஐக்கிய தேசிய கட்சி தனது புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில் ஐந்து தொகுதி அமைப்பாளர்களுக்கு நியமனக்கடிதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தலைமைத்துவ சபை தலைவர் கரு ஜெயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ ஆகிய மூவரும் வருகை தந்தமை விசேட அம்சமாகும்.
இதற்கமைய குறித்த நியமனக்கடிதங்களை எதிர்க்கட்சி தலைவரும் ஐ.தே.கட்சி தேசிய தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ வழங்கி வைத்தார்.
இதன்படி கொலன்னாவை தொகுதி அமைப்பாளராக மேல் மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம். மரிக்கார் நியமிக்கப்பட்டுள்ளதுடன் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளராகவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் சகோதரர் ஆனந்த அளுத்கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தற்போதைய வடமேல் மாகாண முதல்வர் தயாசிறி ஜயசேகர பிரதிநிதித்துவப்படுத்திய பண்டுஸ்நுவர தேர்தல் தொகுதி அமைப்பாளராக துஷார இந்துநில் நியமிக்கப்பட்டுள்ளதுடன் யாப்பகூவ தொகுதியின் முதலாம் பிரிவு சிந்திக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும், பலாங்கொடைக்கு அசங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment