ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 19வது வருடாந்த மாநாடு நாளை சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவிருக்கின்றது.
மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் கொழும்பு தேசிய நூதனசாலை கேட்போர் கூடத்தில் இந்த வருடாந்த மாநாடு நடைபெறும்.
மாநாட்டில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அப்துல் ஹமீத் அப்துல் பதாகே அல்முல்லா பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
அத்துடன் ஊக்குவிப்பு உற்பத்தி திறன் அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தற்காலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் அரசியல் சவால்கள் எனும் தலைப்பில் சிறப்புரையும் ஆற்றுவார். இம்மாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேவரப் பெரும சிறப்பு அதிதியாக கலந்து கொள்ளவுள்ளனர்.

Post a Comment