முன்னாள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சரும் கேகாலை மாவட்டத்தின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினருமான யு.எல்.எம். பாரூக்கின் அரசியல் வாழ்வின் 50 வருட நிறைவு விழாவும் பாரூக் மன்றத்தின் 9 ஆவது வருடாந்த நிறைவு விழாவும் மற்றும் புத்தக வெளியீடும் எதிர்வரும் 20 ஆம் திகதி மாலை 3.45 மணிக்கு கொழும்பு பண்டார நாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
யு.எல்.எம். பாரூக்கின் அரசியல் வாழ்க்கையை ஓய்வு பெற்ற அதிபர் கே. பிரேமதாச 'யுக பெரலியக துன் கோறள அபிமான்ய' எனும் புத்தகமாக எழுதியுள்ளார். அன்றைய தினம் இந்நூல் வெளியிடப்படவுள்ளது.
நிகழ்வில் பிரதம அதிதியாக சபாநாயகர் சமல் ராஜ பக்ஷ கலந்து கொள்ளவுள்ளார். மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், அமைச்சர் மைத்திரி பால சிறி சேன உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

Post a Comment