பள்ளிவாசலை அகற்ற உதவினால் வியாபாரத்தில் ஈடுபட அனுமதிக்கலாம் - பிக்குகள் வற்புறுத்தல்

Thursday, August 14, 20140 comments

பொர­லஸ்­க­மு­வயில் அமைந்­துள்ள பள்­ளி­வா­சலை அகற்­று­வ­தற்கு எமக்கு உத­வி­ய­ளித்தால் நீங்கள் வியா­பா­ரத்தை தொட­ரலாம், இல்­லையேல் இங்கு வியா­பா­ரத்தை நடத்த முடி­யாது என ஜனா­தி­பதி ஆலோ­சகர் ஒருவர் அடங்­க­ளான பிக்­குகள் இருவர் என்னை வற்பு­றுத்­தினர் என முன்­னணி அலங்­கார மின்­வி­ளக்கு விற்­பனை நிலைய உரி­மை­யா­ளரும் முன்னாள் களுத்­துறை நக­ர­சபை தலை­வ­ரு­மான எம்.எஸ்.எம். முபாரக் தெரி­வித்தார்.

பொர­லஸ்­க­முவ பிர­தே­சத்தில் நக­ர­ச­பைக்கு சொந்­த­மான இடத்தில் அலங்­கார மின்­வி­ளக்கு விற்­பனை நிலை­ய­மொன்றை நடத்­து­வ­தற்கு பிக்­குகள் எதிர்ப்பு தெரி­வித்­த­மையால் அங்­கி­ருந்து விற்­பனை நிலையம் அகற்­றப்­பட்ட சம்­பவம் ஒன்று கடந்த மாதம் இடம்­பெற்­றுள்­ளது.

இது தொடர்பில் கடை உரி­மை­யா­ளரை நம்மவன் தொடர்­பு­கொண்டு கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இச்­சம்­பவம் தொடர்பில் எம்.எஸ்.எம். முபாரக் மேலும் தெரி­விக்­கையில், லாஸ்ட் சான்ஸ் நிறு­வ­னத்­தினர் பல­வ­ரு­டங்­க­ளாக  நாட்டின் பல பாகங்­க­ளிலும் ஒரு வருடம் இரண்டு வரு­டங்கள் என  குறு­கிய கால மலிவு விற்­பனை நிலை­யங்­களை திறப்­பது வழக்கம்.

அந்த அடிப்­ப­டையில் பொர­லஸ்­க­முவ, பிலி­யந்­தல வீதியில் நக­ர­ச­பைக்கு சொந்­த­மான காணி ஒன்றை கடந்த ஏப்­ரல்­மாதம் 16 ஆம் திகதி கோரி­யி­ருந்தேன். இவ்­வி­டயம் ஏப்ரல் மாதம் 24 நகர சபையால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு, மாதம் இரு­ப­தா­யிரம் ரூபா வாட­கையில் ஒரு­வ­ருட குத்­தகை அடிப்­ப­டையில் நீடித்து கொள்ளும் புரிந்­து­ணர்வில்  ஆரம்ப கட்­ட­மாக மூன்று மாதத்­துக்கு குத்­த­கைக்கு பெற்­றி­ருந்தேன். இந்த ஒப்­பந்­தத்தை நக­ர­சபை ஏக­ம­ன­தாக ஏற்று, எனக்­கான அனு­ம­தி­யையும் தந்­தி­ருந்­தது. இதற்­கான கடி­தத்தை நக­ர­ச­பையின் செய­லாளர் எனக்கு அனுப்பி வைத்­தி­ருந்தார்.  குறித்த காணியை தமது சொந்த செல­விலே துப்­ப­ரவும் செய்து சுமார் இரு­பது லட்சம் ரூபா செலவில் கூடாரம் ஒன்­றையும் நிர்­மா­ணித்­தோம்.

பின்னர் ஏற்­பட்ட பல அசௌ­க­ரி­யங்கள் கார­ண­மாக ஜூலை மாதம் மூன்றாத் திகதியே விற்­பனை நிலை­யத்தை ஆரம்­பிக்க முடிந்­தது. திறப்பு விழா­வுக்கு பொர­லஸ்­க­முவ நக­ர­சபை தலைவர் கே.டீ.அருண பிர­சா­தையும் அழைத்­தி­ருந்தோம். எனினும் அவர் அலுவல் கார­ண­மாக வர முடி­யா­தி­ருந்­த­தாக தெரி­வித்தார்.  விற்­பனை நிலை­யத்தின்   திறப்­பு­விழா இடம்­பெற்று இரண்டு மணித்­தி­யா­லங்கள் கூட  நிறை­வ­டை­யாத  நிலையில் குறித்த மலிவு விற்­பனை நிலை­யத்­தினை மூடும் படி தமக்கு பௌத்த பிக்­கு­க­ளி­ட­மி­ருந்து அழுத்தம் வரு­வ­தா­கவும் இதனால் தொடர்ந்து அங்கு வியா­பார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடி­யாது எனவும்  தொலை­பே­சியில் தொடர்ப்­பு­கொண்ட நக­ர­சபை தலைவர் என்னிடம் தெரி­வித்தார்.

பின்னர் நக­ர­சபை தலை­வரை  நேரில் சந்­தித்து விப­ரங்­களை அறிந்­து­கொண்டேன். இதற்­க­மைய ஜனா­தி­பதி ஆலோ­ச­கரும் பிலி­யந்­தல பிரி­வெனா விகா­ரையின் விகா­ரா­தி­ப­தி­யு­மான மெத­கொட அபே திஸ்ஸ  தேரர் மற்றும் பிலி­யந்­தல கட்­டு­வா­வெல விகாரை விகா­ரா­தி­பதி தொபித்­தர தமித தேரர் ஆகி­யோரின் அழுத்தம் கார­ண­மா­கவே வியா­பார நட­வ­டிக்­கையை முன்­னெ­டுப்­பதில் தடை ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் இவ்­வி­வ­காரம் தெடர்பில் கடந்த நோன்புப் பெருநாள் தினத்­தன்று ஜனா­தி­பதி ஆலோ­ச­க­ரான மெத­கொட அபே திஸ்ஸ  தேரரை நேரில் சந்­தித்து கலந்­தா­லோ­சித்தேன். எனினும் தமது வியா­பார நட­வ­டிக்கை முன்­னெ­டுப்­பது தொடர்பில் அவர்­க­ளுக்கு விருப்பம் இருக்­க­வில்லை. அத்­தோடு 'தர்கா நகரை ஆக்­கி­ர­மித்­துள்­ள­துபோல் பொர­ள­ஸ­க­மு­வ­வை­யையும் முஸ்­லிம்கள் ஆக்­கி­ர­மிக்க முற்­ப­டு­வதை அனு­ம­திக்க முடி­யாது. இங்கு பள்­ளி­வாசல் ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. அதனை அங்­கி­ருந்து அகற்­று­வ­தற்கு நீங்கள் பங்­க­ளிப்பு செய்தால் உங்­க­ளுக்கு வியா­பார நட­வ­டிக்­கையை அனு­ம­திக்­கலாம்' என தெரி­வித்தார். அதற்கு நான் இணங்­க­வில்லை. அத்­தோடு தொபித்­தர தமித தேரரை தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு உரையாடினே அவரும் அபே திஸ்ஸ தேரர் கூறியதுபோன்றே கூறினார்.

நாட்டில் எந்த பிரதேசத்திலும் சட்ட ரீதியான வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கு சட்டத்தில் அனுமதியிருக்கின்றது. இதனை அமுல்படுத்தக்கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்தேன். இந்நிலையில் நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் இருவர் வந்து இவ்விடயம் தொடர்பில் விசாரித்தனர் என்றார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham