முஸ்லிம்கள் குற்றமிழைப்பார்களேயானால் அவர்களை கண்டறிந்து இஸ்லாமிய ஷரீஆ சட்டப்பிரகாரம் கடும் தண்டனையை வழங்கலாமே என மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபிர் ஹாஜியார் (ஜெ. ஜெய்னுல் ஆப்தீன் ) சபையில் தெரிவித்தார்.
கடந்த வாரம் மத்திய மாகாண சபைத் தலைவர் மஹிந்த அபேகோன் தலைமையில் இடம்பெற்ற சபையின் மாதாந்த கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், "முஸ்லிம்கள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக சில குழுக்களால் கூறப்படுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். முஸ்லிம்களே போதைப்பொருள் விற்பனை செய்கின்றார்கள் என்றால் சட்டரீதியாக விசாரணை நடத்தப்பட்டு விசாரணைகளில் அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்படும் பட்சத்தில் அவர்களுக்கு ஷரிஆ தண்டனை வழங்க முடியும்" எனவும் அவர் குறிப்பிட்டார்

Post a Comment