முஸ்லிம் வாக்காளர்களை உளவியல் ரீதியில் தாக்குகிறது ஹெல உறுமய-முஜிபுர்ரஹ்மான்
Thursday, August 14, 20140 comments
வாக்களிக்கச் செல்லும் முஸ்லிம் பெண்களின் நிகாப் தொடர்பில் அநாவசியமாக கதைக்கும் ஜாதிக ஹெல உறுமய ஊவா மாகாண முஸ்லிம் வாக்காளர்களை உளவியல் ரீதியில் தாக்க முற்படுகிறது. இது தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களிப்பதனை தடுக்கும் இனவாத சக்தியின் புதியதொரு திட்டமாகும் என முஜிபுர்ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.
நிகாப் அணிபவர்களுக்கு வாக்களிப்பதற்கு தடை செய்யும் எவ்விதமான சட்டமும் இலங்கை அரசியல் யாப்பில் கிடையாது. ஆள் அடையாளத்தை உறுதி செய்வதன் மூலம் வாக்களிப்பில் கலந்துகொள்ள முடியும். ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்கு பெண் உத்தியோகத்தர்களை தேர்தல் திணைக்களம் நியமிப்பதனால் வாக்களிப்பின்போது எவ்விதமான தடையும் ஏற்படாது. எனவே மக்கள் தைரியமாக வாக்களிக்கச் செல்லலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் மாளிகாவத்தையிலுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஜாதிக ஹெல உறுமயவே நிகாப் அணிந்தவர்கள் வாக்களிப்பதற்கு செல்ல முடியாது என தெரிவித்துள்ளது. எனினும் இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் எவ்விதமான அறிக்கைகளையும் வெளியிடவில்லை. கடும்போக்கு கட்சியான ஹெல உறுமயவின் அரசியல் சுயலாபத்தை மையமாகக்கொண்டே அக்கட்சியின் செயலாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். இது இவர்களின் இனவாத செயற்பாடுகளின் ஓர் அங்கமாகும்.
அரசின் மீது அதிருப்தியடைந்துள்ள முஸ்லிம் மக்கள் ஆளும்கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது தெளிவான விடயமாகும். அத்தோடு தேர்தல் காலத்தில் பிரிந்தும் தேர்தலின் பின் அரசுடன் ஒட்டிக்கொள்ளும் முஸ்லிம் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். இந்நிலையில் எதிர் கட்சிக்கு முஸ்லிம்களின் வாக்குகள் சென்றடையும் அச்சம் அரசுக்கும் அதன் பங்காளிகளுக்கும் இருக்கின்றது. இதனை தடுப்பதற்கு ஹெல உறுமய புதிய திட்டமொன்றை வகுத்து முஸ்லிம்களை உளவியல் ரீதியில் அச்சுறுத்த நினைக்கிறது. எனவே முஸ்லிம்கள் அச்சமடைய வேண்டிய அவசியம் கிடையாது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment