தௌஹீத் ஜமாஅத், பொதுபலசேனா, சிகள ராவயவின் பேரணிகளுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு
Tuesday, August 12, 20140 comments
ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் மற்றும் பொதுபலசேனா அமைப்புகள் நாளை கொழும்பில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலின் அரஜகங்களை கண்டித்தும் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தினர் நாளைய தினம் மாலை மூன்று மணிக்கு மாளிகாவத்தையிலிருந்து கோட்டை வரை பேரணியாக சென்று கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவிருப்பதாக அறிவித்திருந்தனர்.
அத்தோடு இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் பொது பல சேனா அமைப்பினர் கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்துவதாக தெரிவித்திருந்தனர்.
இன முருகலை ஏற்படுத்தும்வகையில் நடந்துகொள்ளும் இரு கடும்போக்குவாத அமைப்புக்கள் நாளைய தினம் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டங்கள் மூலம் அமைதிக்கு குந்தகம் ஏற்படலாம் என தெரிவித்து நீதிமன்றம் தடை செய்துள்ளது.
மற்றும் சிகள ராவய அமைப்பின் ஆர்ப்பாட்டத்திற்கும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தினர் நடத்தவிருந்த பேரணி தொடர்பில் பல கண்டனங்கள் இருந்த நிலையில் இவ்வார்ப்பாட்ட பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment