இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்தழைப்பு வழங்கப்படும் - பாகிஸ்தான்

Monday, August 25, 20140 comments


இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்தழைப்பு வழங்கப்படும் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

நெருக்கடியான தருணங்களில் இலங்கைக்கு பாகிஸ்தான் பக்க பலமாக செயற்பட்டுள்ளதாக இலங்கைக்கான முன்னாள் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மொஹமட் அயுப் தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகளினால் பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்களை சமாளிக்க பாகிஸ்தான் இலங்கைக்கு பூரண ஆதரவினை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சரியான பாதையில் பயணம் செய்வதாகவும், சிறந்த முறையில் நல்லிணக்க முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்விவகாரப் பிரச்சினைகளில் வேறும் தரப்பினர் தலையீடு செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் மேற்குலக நாடுகளின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க மனித உரிமை விவகாரங்களை இந்த தரப்பினர் பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுடன் இலங்கை பேணி வரும் உறவுகள் தொடர்பில் எவ்வித முரண்பாடும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham