ஆப்கான் அடுத்த ஜனாதிபதி யார்?
Monday, August 25, 20140 comments
கடந்த ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தேர்தலுக்கு அமைய ஹமீட் கர்சாய்க்கு பதிலாக புதிய ஜனாதிபதி ஒருவர் பதவியேற்கும் நிகழ்வு எதிர்வரும் செப்டெம்பர் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
ஆப்கானிஸ்தானின் ஐக்கிய நாடுகள் பிரதி பிரதானியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் ஹமீட் கர்சாயின் காரியாலயத்தின் ஊடாக இந்த தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முதல் சுற்றுக்கு எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குவீதத்தை பெற்றிருக்க வில்லை.
அதனையடுத்து இரண்டாவது கட்ட தேர்தல் பிரதான வேட்பாளர்களான அப்துல்லா – அப்துல்லா மற்றும் பொருளியல் நிபுணரான அஸ்ரப் கானி ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றது.
இரண்டாவது சுற்று தேர்தல் பெறுபேறுகள் தொடர்பில் இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்ட நிலையில், பெறுபேறுகள் மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றன.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment