கடா ஆட்டில் பால் சுரக்கும் அதிசயம்
Monday, August 25, 20140 comments
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடா ஆடொன்றுக்கு பால் சுரப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். பெண் ஆட்டைப் போன்று ஆண் ஆடொன்றிலும் பால் சுரப்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அல் அய்ன் எனும் பிராந்தியத்திலுள்ள பண்ணையொன்றில் இந்த ஆடு உள்ளது. இந்த கடா ஆட்டில் முலை போன்ற உறுப்புக்கூடாக பால் சுரப்பதை சுமார் இரு மாதங்களுக்குமுன் முதல் தடவையாக தான் அவதானித்ததாகவும் அதன்பின் தொடர்ச்சியாக அதில் பால் சுரப்பதாகவும் பண்ணை உரிமையாளரான நஸீர் அல் அலாவி தெரிவித்துள்ளார். இது ஒரு அற்புதம் என அவர் வர்ணித்துள்ளார்.
இந்த ஆட்டை சில வருடங்களுக்குமுன் உள்ளூர் சந்தையொன்றிலிருந்து நஸீர் அல் அலாவி வாங்கினேன். இந்த ஆட்டில் உடல்ரீதியான வித்தியாசம் எதையும் தான் அவதானிக்கவில்லை எனவும் இந்த ஆடு ஏனைய பெண் ஆடுகளுடன் இணைந்து இனப்பெருக்கச் செயற்பாட்டில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
'கடா ஆட்டில் பால் சுரப்பதற்கான காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. இது ஒரு அற்புதம் என்றே நான் கருதுகிறேன். எனது கடா ஆடுகளில் மிகச் சிறந்த ஆடு இதுதான். இந்த ஆட்டின் மூலம் பல குட்டிகள் பிறந்துள்ளன. இந்த ஆட்டின் பாலை இதுவரை நான் குடித்துப் பார்க்கவில்லை. ஆனால் அதை பரிசோதனைக்காக ஆய்வுகூடத்துக்கு அனுப்பியுள்ளேன்' என்கிறார் நஸீர் அல் அலாவி.
நீங்களும் உங்கள் ஊரில் உள்ள கடா அடுகளிடம் பால் சுறக்க முயற்சித்து விடவேண்டாம். விவகாரம் விபரீதத்தில் முடிந்துபோகலாம். கவனம்!!!
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment