மணப்பெண் மருதாணி வைக்கவில்லை; திருமணத்தை நிறுத்திய மணமகன்
Thursday, August 14, 20140 comments
இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள கன்சன்பாக் பகுதியை சேர்ந்தவர் மீர் மசூத் அலி. ஏற்கெனவே விவாகரத்து பெற்ற இவர், தற்போது டுபாயில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இவருக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது கவுஸ் பாஷா என்பவரின் மகளுக்கும் கடந்த 9ஆம் திகதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணத் துக்கு முன்பே மணமகனுக்கு வரதட்சணை அளிக்கப்பட்டுவிட்ட தாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 7ஆம் திகதி மணமகன் மீர் மசூத் அலி மற்றும் அவரது குடும்பத்தினர் மணமகளை காண அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது, மணப்பெண் தனது கையில் மருதாணி வைத்துக்கொள்ளாததை கவனித்த மணமகன் குடும்பத்தினர் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டனர். உடனடியாக இதுகுறித்து மணப்பெண்ணின் குடும்பத்தினர், மணமகனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத மணமகன், திருமணத்தை நிறுத்தி விடும்படி கூறியுள்ளார். மண மகனின் பெற்றோரும் திருமணத்தை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.
உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டதாகவும், எனவே திருமணத்தை நிறுத்த வேண்டா மென்றும் மணப்பெண்ணின் குடும்பத்தினர் பலமுறை கேட்டுக் கொண்டபோதும், அதற்கு மண மகன் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் திருமணம் நின்று போனது. இது குறித்து மணப்பெண் வீட்டார் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment