நகர அபிவிருத்தி அதிகார சபை அத்துமீறி செயற்படுகிறது - முஜிபுர் ரஹ்மான் குற்றச் சாட்டு

Thursday, August 21, 20140 comments


கொழும்பு நகரில் யுத்தத்திற்கு பின்னர் அபிவிருத்தி என்ற பெயரில் அரசு பல காணிகளை சுவீகரிக்கின்றது. ஆனால் இதன்போது காணி திணைக்களத்தின் சட்டங்களை  கடைபிடிக்காது  நகர அபிவிருத்தி அதிகார சபை அத்துமீறி செயற்படுவதாக மேல்மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தினார்.

இதனால் கொழும்பில் உள்ள நடுத்தர வருமானம் பெரும் அப்பாவி மக்களே பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை மேல்மாகாண சபையில் மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட அரசினால் அபகரிக்கப்படும் காணிகள் தொடர்பான பிரேரணையொன்றை முன்வைத்தது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது முஜிபுர் ரஹ்மான் மேலும் உரையாற்றுகையில்,

யுத்தத்தின் பின்னர் மக்கள் சமாதானத்தையும் நிம்மதியையும் எதிர்பார்த்தனர். எனினும் கொழும்பு வாழ் அப்பாவி மக்களுக்கு அது துரதிஸபுடமானதாக இருந்து வருகின்றது.

நகர அபிவிருத்தி அமைச்சும் காணி திணைக்களத்தின் சட்டங்களை மதிப்பதில்லை. அதன் செயளாலராகவும் பாதுகாப்பு அமைச்சின் செயளாலராகவும் ஜனாதிபதியின் சகோதரர் கோடபாய ராஜபக்ஷ இருக்கின்றார். இந்நிலையில் இவர் சட்டத்தை மதிக்காது பலவந்தமாக மக்கள் வெளியேற்றப்பட்டு காணிகள் சுவீகரிக்கப்படுகின்றது. இதனிடையே மக்களை ஒரு இடத்திலிருந்து அகற்றுவதாயின் இன்னுமொரு இடத்தில் குடியமர்த்த வேண்டும். ஆனால் அதற்கான எந்த ஏற்பாடுகளும் இன்றி மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். எனவே மனிதாபிமான முறையில் நடந்துகொள்ள வேண்டும்.

கொழும்பில் சனத்தொகையின் பரம்பலை மாற்றுவதற்கே அரசு இவ்வாறு நடந்துகொள்கிறது. அது மட்டுமன்றி அரசியல் சுய நலமும் பார்க்கப்படுகின்றது. இந்த தொகுதி ஐ.தே.க. ஆதரவாளர்களே அதிகமாக இருக்கின்றனர். இதனை மாற்றியமைக்க வேண்டும் என அரசு திட்டமிட்டு செயற்படுகின்றது.

2007 ஆம் ஆண்டு சார்க்க மாநாடு கொழும்பில் நடைபெற்றபோது கொம்பனித் தெருவிலிருந்து 300 குடும்பங்களின் காணி சுவீகரிக்கப்பட்டது. அம்மக்களுக்கு இதுவரை வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவில்லை. அவர்கள் இன்னும் மட்டக்குழி வெளிகொட பகுதியில் பெரும் அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

அத்தோடு கொம்பனித்தெரு கிலானி வீதியிலிருந்து 2010 ஆம் ஆண்டு 24 மணி நேர காலக்கெடுக்குள் வெ ளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு ஏற்பட்ட அநீதிகள் தொடர்பில் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. குறித்த தீர்ப்பின் பிரகாரம் தெமட்டகொட மஹிந்தோதய வீட்டுத்திட்டத்தில் இவர்களுக்கு வீடு கொடுக்கப்பட வேண்டும். எனினும் அந்த தீர்ப்பை மதிக்காது அவர்களுக்கு வீடு கொடுக்கப்படவில்லை. மாற்றமாக தெமட்டகொட பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இருந்த ரயில் நிலைய ஊழயர்களுக்கான விடுதியை அவ்விடத்திலிருந்து அகற்றி அவர்களை மஹிந்தோதய வீட்டுத்திட்டத்திற்கு உள்ளீர்த்தனர். மட்டுமன்றி ரயில் நிலைய விடுதி இருந்த இடத்தை நகர அபிவிருத்தி அமைச்சு சுவீகரித்து அதனை ஜனாதிபதிக்கு வேண்டப்பட்டவர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.

அரசு பொது மக்களின் காணிகளை அபகரிக்குமானால் அதனை பொது தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்த அரசு மக்களின் காணிகளை சவீகரித்து இந்திய, பாகிஸ்தான் மற்றும் சீன கம்பகளுக்கும் அரசாங்கத்தின் பங்குதாரிகளுக்கும் விற்கின்றன. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.


Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham