வீதியில் இறங்கி போராட தயாராகும் ரணில்!
Thursday, August 21, 20140 comments
புத்தசாசனத்தை பாதுகாப்பதற்காக வீதியில் இறங்கி போராட தயார் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க தயாராகி வரும் பௌத்த விகாரை மற்றும் ஆலயங்கள் தொடர்பான சட்டமூலத்தினால் பௌத்த சாசனத்திற்கு எந்த நன்மையுமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உத்தேச இந்த சட்டமூலம் தொடர்பில் கோட்டே நாக விகாரையில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மாநாயக்க தேரர்கள் முன்வைத்துள்ள திருத்த யோசனைகளை உள்ளடக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் கட்சி என்ற வகையில் பௌத்த சாசனத்தை பாதுகாக்க நாம் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் கோட்டை நாக விகாரையின் விகாராதிபதி மாதுளுவாவே சோபித தேரரும் கலந்து கொண்டார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment