ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவுக்கு தோல்வியே; ரணிலுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் - விக்ரமபாகு
Friday, August 22, 20140 comments
ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியடையக் கூடிய சாத்தியங்கள் மிக அதிகம் என எதிர்வு கூறப்படுகிறது.
புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் புயற் காற்றாக மாறி மறுபக்கம் வீசக்கூடிய சாத்தியங்கள் உண்டு.
கொள்ளையில் ஈடுபட்டவர்கள் நியூயோர்க் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜே.வி.பி.யும் வேட்பாளர் ஒருவரை களமிறக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு.
ஜே.வி.பி போருக்கு ஆதரவளித்திருந்தது. எனவே போருக்கு ஆதரவாக இனவாத கோட்பாடுளை முன்வைத்த ஆளும் கட்சியும், ஜே.வி.பியும் போட்டியிட உள்ளன.
இனவாத கருத்துக்களை வெளியிட்ட ஆளும் கட்சியும் ஜே.வி.பியும் தேர்தலில் வெற்றியீட்டக் கூடிய சாத்தியங்கள் கிடையாது. இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையில் வாக்குகள் சிதைவடையக் கூடிய சாத்தியங்கள் உண்டு.
போருக்கு எதிர்ப்பை வெளியிட்ட ரணில் விக்ரமசிங்கவும் போட்டியிட உள்ளார். இதனால் போருக்கு எதிராக குரல் கொடுத்த ரணில் விக்ரமசிங்க தேர்தலில் வெற்றியீட்ட அதிகளவு வாய்ப்பு உண்டு.
எனவே, ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதனை தடுக்க முயற்சி எடுக்கப்படலாம்.
பாசிசவாத கொள்கைகளின் ஊடாக அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்கு வேட்டையில் ஈடுபடக் கூடும்.
எனினும், இனவாதத்தை எதிர்க்கும் தரப்பினருக்கு அதிகளவான வாக்குகள் கிடைக்கும் என விக்ரமபாகு கருணாரட்ன எதிர்வு கூறியுள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment