என்னையும் ரிஷாதை அரசாங்கத்தின் எடுபிடிகள் என்று ஐ.தே.க. கூறுகிறது - ஹக்கீம்

Monday, August 18, 20140 comments


ஊவா மாகாண சபை தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தில் பதுளை மாவட்டத்தில் இணைந்து போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான தனக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரிசாத் பதியுத்தீனுக்கும் அரசாங்கத்தோடு ஓர் இரகசிய ஒப்பந்தம் இருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியினர் பொய்ச்செய்தியொன்றை பரப்பி வருவதாக குறிப்பிட்ட நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் ஒற்றுமையிலேயே சமூகத்தின் வெற்றியும் இருப்பும் தங்கியிருப்பதாகவும் கூறினார்.

வெலிமடை எப்.சீ. மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முக்கிய உரையை நிகழ்த்தும் போதே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.


வெலிமடை பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றும் போது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தவையாவன;

எங்களைப்பற்றிய தேவையில்லாத சந்தேகங்களை ஐக்கிய தேசியக்கட்சியினர் மக்கள் மத்தியில் உருவாக்கி வருகின்றனர். அதாவது எங்களை அரசாங்கத்தின் எடுபிடிகள் என்றும் கூலிப்படையினர் என்றும் அவர்கள் பதுளை மாவட்டத்தில பிரசாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர். அவர்கள் தேர்தலில் பாதிக்கப்படப் போகின்றனர்  என்பதனால் இவ்வாறு கூறுவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

முஸ்லிம் காங்கிரஸ் வேறு ஒரு முஸ்லிம் கட்சியையும் துணைக்கு அழைத்துக்கொண்டு பதுளை மாவட்டத்தில் ஊவா மாகாண சபை தேர்தலில் களமிறங்கியிருப்பது ஒரு பெரிய காட்டிக்கொடுப்பு எனக்கூறுகின்றனர்.


ஐ.தே. கட்சியினர் எனக்கும் ரிசாத் பதியுத்தீன் அமைச்சருக்கும் அரசாங்கத்தோடு ஓர் இரகசிய ஒப்பந்தம் இருக்கின்றதாக ஒரு பொய்ச் செய்தியைப் பரப்பி வருகின்றனர் என்றார்
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham