பாரிஸில் சவூதி இளவரசரின் வாகனத் தொடரணி மீது தாக்குதல் பணமும் கொள்ளை

Monday, August 18, 20140 comments



பிரான்ஸின் பாரிஸ் நகரில் சவூதி இளவரசர் ஒருவருக்கு சொந்தமான வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்திய ஆயுததாரிகள் 200000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு லீ போர்கெட் விமான நிலையத்தை நோக்கி சென்ற சவூதி இளவரசர் ஒருவரின் வாகனத் தொடரணியை தாக்கிய ஆயுததாரிகள் பணம் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்ற வாகனமொன்றை கைப்பற்றியுள்ளனர்.

அந்த வாகனத்தின் சாரதியும் ஏனைய இருவரும் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதன் பின் கடத்தப்பட்ட அந்த வாகனம் பாரிஸ் வடகிழக்கேயுள்ள செயின் மெஸ்மெஸ் கிராமத்தில் எரியூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

பாரிஸிலுள்ள சவூதி தூதரகத்திலிருந்து புறப்பட்ட சுமார் 10 வாகனங்களை உள்ளடக்கிய வாகனத் தொடரணியே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham