மத மாற்று சட்டம் பாராளுமன்றத்துக்கு வர புத்தசாசன அமைச்சு உறுதியளிப்பு - ராவன பலய
Monday, August 18, 20140 comments
மதமாற்ற தடைச்சட்டம் திருத்தங்களுடன் விரைவில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுமென புத்தசாசன அலுவல்கள் அமைச்சு ராவணா பலய அமைப்பிற்கு உறுதியளித்துள்ளதாக அதன் தலைவர் இத்தேகத்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
கடந்த வாரம் புத்தசாசன பிரதியமைச்சர் எம்.எஸ். குணவர்தன மற்றும் அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளுடன் எமது அமைப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
இதன்போது முக்கியமாக நாட்டில் இயங்கும் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் அடிப்படைவாத சக்திகள் பெளத்தர்களை இலக்கு வைத்து மதமாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது என்றார்
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment