இம்ரான் கான் தலைமையில் பாக். அரசுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு போராட்டம்
Sunday, August 17, 20140 comments
பாகிஸ்தானிய எதிர்கட்சி அரசியல்வாதி இம்ரான் கான் தலைமையில் பாரிய அரசாங்க எதிர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று நடத்தப்பட்டது.
இதற்காக லாகூரில் இருந்து ஆயிரகணக்கான எதிர்கட்சி உறுப்பினர்கள் நடைபயணமாக இஸ்லாமாபாத்தை அடைந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2013 ஆம் ஆண்டு இடம் பெற்ற தேர்தலில் மோசடியான முறையில் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெற்றி பெற்றதாக இம்ரான் கான் குற்றம் சுமத்தி வருகிறார்.
இந்தநிலையில், நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேநேரம், மற்றுமொரு எதிர்கட்சி அரசியல் தலைவரான தாஹிருல் கௌட்ரீ பசுமை புரட்சியை வலியுறுத்தியிருந்த பேரணியும் இஸ்லாமாபாத்தில் வைத்து இம்ரான் கானுடன் இணைந்து கொண்டது.
2013 ஆம் ஆண்டு இடம் பெற்ற தேர்தலே பாகிஸ்தானிய வரலாற்றில் ஜனநாயக ரீதியான ஆட்சி மாற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது.
அதன் பின்னர், நவாஸ் ஷெரீப்பின் ஆட்சிக்கு எதிராக நடத்தப்படும் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இதுவென்று கருதப்படுகின்றது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment