அக்குறணை பள்ளிவாயலில் ஜும்ஆவுக்கு வந்த பிக்குகள்!
Sunday, August 17, 20140 comments
சமூக நல்லிணக்கத்திற்கு வழிகோளும் வகையில் வெள்ளிக்கிழமை புனித ஜும்மா தொழுகையை அவதானிக்கும் நோக்கில் 25 பௌத்த குருமாரும் பௌத்த பிரமுகர்களும் அக்குறணைப் பள்ளிக்கு வருகை தந்தனர்.
சமய முரண்பாடுகளை நீக்கும் ஒரு முயற்சியாக அக்குறணை அஸ்னா மத்திய பள்ளிவாசலின் பரிபாலன சபையின் ஏற்பாட்டில் அக்குறணைப் பிரதேசத்தை சேர்ந்த 25 பௌத்த பிக்குமார்களையும் மற்றும் சில பௌத்த பிரமுகர்களையும் அழைத்து வெள்ளிக்கிழமை ஜும்மாவில் குத்பா பிரசங்கத்தை சிங்கள மொழியில் நிகழ்த்தி அவர்களுக்கு அன்ன தானமும் வழங்கப்பட்டன.
அக்குறணை அஸ்னா மத்திய பள்ளிவாசல் பரிபாலன சபையின் தலைவர் சட்டதரணி அஸ்மி பாரூக் உற்பட பரிபாலன சபையினர் இந் நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தனர்.
இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன் நிகழ்வு தொடர்பாக கலந்து கொண்ட அனைத்து பௌத்த தேரர்களும் மேற்படி முன் தாதரியை பெரிதும் பாராட்டினர்.
காலை 11 மணி அளவில் பள்ளிவாயலுக்கு சமூகம் தந்த தேரர்களை வரவேற்று அவர்களுக்காக பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அன்னதானம் உரிய கால இடைவெளியில் பரிமாரப்பட்டது.
அதன் பின் அவர்களுக்கு புரியும் மொழியிலும் இஸ்லாமிய சமய வரையறைகளுக்கு உபட்ட விதத்தில் விஷேடமாக தயார் செய்யப்பட்ட சிங்கள மொழியிலான கொத்பா பிரசங்கத்தை மௌலவி கலீலுல் றஹ்மான் அவர்கள் நிகழ்த்தினார். மேற்படி கொத்பாவை அவர்கள் செவிமடுப்பதற்கு மேல்மாடியில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மத்திய மாகாண சபை உறுப்பினர்களான குனதிலக்க ராஜபக்ஷ, எஸ்.எம்.பீ.த அல்விஸ் அக்குறணை பிரதேச செயலாளர் மாதவ வர்னகுலசூரிய மற்றும் அலவத்துகொடை பொலீஸ் அதிகாரிகள் உற்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
அக்குறணை கொணகல்களை விகாரையைச் சேர்ந்த தலைமை விகாராதிபதி உற்பட 25 மதகுருமார் மற்றும் ஆறு பௌத்த பொலீஸ் அதிகாரிகளும் பிரதேச சபை மற்றும் மகாகண சபை பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
சமூக ஒற்றுமை, நபி மூஸா அவர்களின் வரலாறும் பிர்அவுன் தண்டிக்கப்பட்ட விதமும், முஹம்மது நபி அவர்களின் சுருக்கமான வாழ்கை வரலாறு என்பன தொடர்பாக குத்பாவில் தொட்டுக் காட்டப்பட்டது.
தொழுகையை அடுத்து இடம் பெற்ற கலந்துரையாடலில் கொணகல்களை விகாராதிபதி உரையாற்றினார். நாட்டின் அண்மைகாலச் சம்பவங்களும் சமூகங்கங்கள் இணக்கமாக வாழ்வது பற்றியும் விகாராதிபதி கருத்து வெளியிட்டார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment