ராஜபக்ஷ குடும்பத்தின் களியாட்டங்களுக்காக மக்கள் பணம் பயன்படுத்தப்படுகின்றது – ஐ.தே.க

Sunday, August 17, 20140 comments


அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. மக்களிடமிருந்து அறவீடு செய்யப்படும் மில்லியன் கணக்கான வரிப்பணம், ராஜபக்ஷ அரசாங்கத்தின் களியாட்டங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றது என கட்சி தெரிவித்துள்ளது.

அராசங்கத்தின் ஊழல் மோசடிகளினால் நாட்டில் கடும் வரட்சி நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. நாட்டின் தந்தை என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஜனாதிபதி, தனது பிள்ளைகளின் நெருக்கடி நிலைமைக்கு என்ன செய்தார் என ஐக்கிய தேசியக் கட்சி ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆட்சியாளர்களின் களியாட்டங்களுக்காக ஒட்டுமொத்த மக்களே சுமைகளை சுமக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மக்களை நேசிக்கும் ஆட்சியாளர்கள் நாட்டை ஆட்சி செய்தால் இவ்வாறான வரட்சியோ அல்லது சிக்கல்களோ ஏற்படாது என சுட்டிக்காட்டியுள்ளது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham