கைமாறிச் சென்றுவிட்ட ஹஜ் விவகாரம்! (சிறப்புக் கட்டுரை)

Thursday, August 14, 20140 comments



ஏ.ஆர்.ஏ. பரீல்

நீங்கள் மாறு செய்­வீர்­க­ளே­யானால் உங்­களை அல்­லாத வேறு சமூ­கத்­த­வரை உங்­க­ளுக்குப் பக­ர­மாக ஆக்­குவேன். இது அல் குர்­ஆனின்  வாச­கங்கள். அல்குர் ஆனில் அல்லாஹ் இவ்­வாறு தான் கூறி­யி­ருக்­கிறான்.

அல்­குர்­ஆனின் ஆழ­மான போத­னைகள் இன்று உண்­மை­யாகி விட்­டன. எமது தலை­வர்­க­ளுக்­கி­டை­யி­லான முரண்­பா­டு­க­ளி­னாலும் போட்­டி­க­ளி­னாலும் ஹஜ் விவ­காரம் முஸ்லிமல்லாதவர்களின் கைக­ளுக்குள் சங்­க­ம­மாகி விட்­டன.

அல்­குர்­ஆனின் ஆழ­மான போத­னை­களை மதி­யாத சமூக தலை­வர்­களைப் புறந்­தள்ளி அல்லாஹ் அவர்கள் மூலம் எமக்கு நீதியைப் பெற்றுத் தர தீர்­மா­னித்து விட்டான் போலும்.

பல தட­வைகள் நீதி­மன்­றப்­ப­டி­க­ளேறி அவ­தி­யுற்ற ஹஜ் விவ­காரம் கண்ணீர் சிந்­து­கி­றது. அது ஆழ்ந்த துய­ரத்தின் ஊற்­றாகும்.

கடந்த திங்­கட்­கி­ழமை இவ்­வ­ருட ஹஜ் விவ­கார பூதா­க­ரத்­திற்கு நீதி­மன்றம் தீர்ப்­பொன்­றினை வழங்கி அத்­தீர்ப்­பினை அமுல் நடாத்­து­வ­தற்கு புத்­த­சா­சனம் மற்றும் மத அலு­வல்கள் அமைச்சின் செய­லாளர் எம்.கே.பி. திஸா­நா­யக்­க­விற்கு அதி­கா­ரத்­தினை வழங்­கி­யுள்­ளது. இவ்­வ­ருட ஹஜ் கோட்­டாவை முக­வர்­க­ளுக்­கி­டையில் திசா­நா­யக்­கவே பகிர்ந்து பட்­டி­யலைத் தயா­ரித்­தி­ருந்தார்.
குறிப்­பிட்ட பட்­டி­ய­லுக்கு அங்­கீ­காரம் அளித்த உயர்­நீ­தி­மன்றம் அதனை சவூதி ஹஜ் விவ­கார அமைச்­ச­ருக்கு தாம­தி­யாமல் அனுப்பி வைக்­கு­மாறு உத்­த­ரவு பிறப்­பித்­தது.

ஹஜ் முக­வர்­க­ளுக்­கென நடாத்­தப்­பட்ட நேர்­மு­கப்­ப­ரீட்­சையில் அவர்கள் பெற்­றுக்­கொண்ட புள்­ளி­களின் அடிப்­ப­டையில் கோட்­டாவை பகி­ரு­மாறு உயர் நீதி­மன்றம்  கடந்த வாரம் அமைச்சின் செய­லாளர் திசா­நா­யக்­கவைப் பணித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். தயா­ரிக்­கப்­பட்ட புதிய பட்­டி­ய­லின்­படி ஹஜ் முக­வ­ரொ­ரு­வ­ருக்கு அவர்கள் பெற்­றுக்­கொண்ட புள்­ளி­களின் அடிப்­ப­டையில் ஆகக் கூடிய கோட்­டா­வாக 51 உம் ஆகக் குறைந்த கோட்­டா­வாக 10 உம் வழங்­கப்­பட்­டுள்­ளன.

ஹஜ் குழு­வினால் ஏற்­க­னவே தயா­ரிக்­கப்­பட்ட கோட்டா பகிர்வு பட்­டி­யலில் ஹஜ் குழுவின் இணைத் தலைவர் ஏ.எச்.எம். பௌஸி­யினால் ஏற்­க­னவே சவூதி ஹஜ் அமைச்­ச­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்­தது. நீதி­மன்ற உத்­த­ர­வின்­படி திசா­நா­யக்க தயா­ரித்த பட்­டி­ய­லுக்கே சட்ட அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

நீதி­மன்றில் ஹஜ் விவ­காரம்


இம்­முறை ஹஜ் கோட்டா நியா­ய­மான முறையில் பகி­ரப்­ப­ட­வில்­லை­யெ­னவும் கோட்டா பகிர்வில் ஊழல்­களும் அநீ­தி­களும் இடம்­பெற்­றுள்­ளதால் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள கோட்டா பகிர்வுப் பட்­டி­யலை இரத்துச் செய்து ஹஜ் முக­வர்கள் நேர்­முகப் பரீட்­சையில் பெற்­றுக்­கொண்ட புள்­ளி­களின் அடிப்­ப­டையில் கோட்­டாவை மீளப் பகிர்­வ­தற்கு உத்­த­ர­வி­டு­மாறும் உயர்­ நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டது.

செரண்டிப் ஹஜ் உம்ரா முக­வர்­களின் சங்கம் இந்த வழக்­கினை தாக்கல் செய்­தி­ருந்­தது. இச்­சங்­கத்தைச் சேர்ந்த10 முகவர் நிலை­யங்கள் மனுவில் கையொப்­ப­மிட்­டி­ருந்­தன.

பிர­தி­வா­தி­க­ளாக ஹஜ் குழுவின் இணைத்­த­லை­வர்­க­ளான சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி பிர­தி­ய­மைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் முஸ்லிம் சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் எம்.எச்.எம்.ஸமீல் புத்­த­சா­சன மற்றும் மத அலு­வல்கள் அமைச்­சரும் பிர­த­ம­ரு­மான டி.எம். ஜய­ரத்ன அமைச்சின் செய­லாளர் எம்.கே.பி. திசா­நா­யக்க ஹஜ் குழு உறுப்­பினர் டாக்டர் என்.எம்.எம். இக்பால் மின்­சக்தி வலு அமைச்சின் மேல­திக செய­லாளர் எம்.ஐ.எம்.றபீக் புனர்­வாழ்வு அமைச்சின் மேல­திக செய­லாளர் எம்.எச்.எம். நய்­முதீன் உள்­நாட்டு இறை­வரித் திணைக்­கள ஆணை­யாளர் என்.எம்.எம். நிப்லி அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் உதவிச் செய­லாளர் மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம் ஆகியோர் பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தனர்.
இந்­நி­லையில் வழக்­கினை விசா­ர­ணைக்கு எடுத்துக் கொண்ட உயர்­நீ­தி­மன்றம் ஹஜ் முக­வர்­க­ளி­டையே பகி­ரப்­பட்ட கோட்டா பட்­டி­யலை உடன் அமு­லுக்கு வரும் வகையில் இரத்துச் செய்­தது. நேர்­மு­கப்­ப­ரீட்­சையின் போது முக­வர்கள் பெற்றுக் கொண்ட புள்­ளி­களின் அடிப்­ப­டையில் கோட்டா மீள பகி­ரப்­பட வேண்­டு­மெ­னவும் உத்­த­ர­விட்­டது.

முஸ்லிம் அல்­லா­த­வர்­களின் கைகளில் ஹஜ் விவ­காரம்


முஸ்­லிம்கள் தமது இறுதிக் கட­மை­யான ஹஜ் கட­மை­யைக்­கூட திருப்­தி­யுடன் நிறை­வேற்றிக் கொள்ள இய­லாத நிலைக்குத் தள்­ளப்­பட்டு விட்­டார்கள். வாழ்­நாளில் ஒரு தட­வை­யேனும் ஹஜ் கட­மையை நிறை­வேற்றிக் கொள்ள கனவு கண்­ட­வர்கள் கண்ணீர் சிந்­து­கி­றார்கள்.

தனது வாழ்நாள் முழு­வதும் சிறுகச் சிறுக ஹஜ்­ஜுக்­காக சேமித்­த­வர்கள் ஹஜ் நிறை­வே­றாத நிலையில் முது­மை­ய­டைந்து நாட்­களை எண்ணிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். ஹஜ் விவ­காரம் தற்­போது முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளி­னா­லேயே கையா­ளப்­படும் நிலைக்கு உள்­ளா­கி­யுள்­ளமை வருந்­தத்­தக்­க­தாகும். பிர­தம நீதி­ய­ர­சரின் தலை­மை­யி­லான நீதி­ய­ர­சர்கள் குழுவே ஹஜ்­ஜுக்கு தீர்ப்பு வழங்­க­ியுள்­ளது. ஹஜ் கோட்டா எவ்­வாறு பகி­ரப்­பட வேண்­டு­மென பிர­தம நீதி­ய­ர­ச­ரினால் உத்­த­ரவு வழங்­கப்­பட்­டுள்­ளது.

ஹஜ் கோட்­டாவை ஹஜ் முக­வர்­க­ளுக்­கி­டையில் அவர்கள் பெற்­றுக்­கொண்­டுள்ள புள்­ளி­களின் அடிப்­ப­டையில் மீள பகி­ரு­மாறு உயர்­நீ­தி­மன்றம் புத்­த­சா­சன மற்றும் மத அலு­வல்கள் அமைச்சின் செய­லாளர் எம்.கே.பி. திசா­நா­யக்­காவை பணித்­தி­ருக்­கி­றது. எமது ஹஜ் குழுவின் பொறுப்­பி­லி­ருந்த இந்தப் பணி தற்­போது நீதி­மன்றம் மூலம் பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த அதி­கா­ரி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. எனவே எமது ஹஜ் இணைத்­த­லை­வர்கள் தற்­போது செய­லி­ழந்து அதி­காரம் பறிக்­கப்­பட்ட நிலையில் இருக்­கி­றார்கள்.
ஹஜ் குழுவை நிய­மிப்­ப­வரும் எம்மைச் சேராத ஒரு­வரே என்­பது யாவரும் அறிந்­ததே. புத்­த­சா­சனம் மற்றும் மத அலு­வல்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்­ச­ரி­னா­லேயே இந்த நிய­மனம் வழங்­கப்­ப­டு­கி­றது. எனவே தற்­போது ஹஜ் விவ­காரம் மாற்று இனத்­த­வர்­களின் கைக­ளுக்கே முற்றும் முழு­து­மாக மாற்றம் பெற்­றி­ருக்­கி­றது.

ஹஜ் குழு­வினால் தயா­ரிக்­கப்­பட்ட கோட்டா பகிர்வு பட்­டியல்


ஹஜ் குழு இணைத்­த­லை­வர்­களில் ஒரு­வ­ராக பிர­தி­ய­மைச்சர் அப்துல் காதரின் பங்­க­ளிப்­பின்றி இணைத் தலைவர் சிரேஷ்ட அமைச்சர் எ.எச்.எம். பௌஸி­யினால் தயா­ரிக்­கப்­பட்டு சவூதி அரே­பிய ஹஜ் அமைச்­ச­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்ட ஹஜ் கோட்டா பகிர்வுப் பட்­டி­யலே நீதி­மன்றில் சவா­லுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது.

2240 ஹஜ் கோட்­டாவும் 91 முகவர் நிலை­யங்­க­ளுக்­கி­டையில் பகி­ரப்­பட்­டி­ருந்­தன. ஒரு முகவர் நிலை­யத்­துக்கு ஆகக் கூடிய கோட்­டா­வாக 85 உம் ஆகக் குறைந்த கோட்­டா­வாக 5உம் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. முஸ்லிம் கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் நடாத்­தப்­பட்ட முக­வர்­க­ளுக்­கான நேர்­முகப் பரீட்­சையில் 50 க்கும் மேற்­பட்ட புள்­ளி­களைப் பெற்றுக் கொண்­ட­வர்­க­ளுக்கே கோட்டா வழங்­கப்­பட்­டது. 50 க்கும் குறை­வான புள்­ளி­களைப் பெற்ற முக­வர்­க­ளுக்கு கோட்டா வழங்­கப்­ப­ட­வில்லை.

நேர்­முகப் பரீட்­சைக்கு 115 ஹஜ் முக­வர்கள் அழைக்­கப்­பட்­டி­ருந்தும் 113 முக­வர்­களே சமூ­ம­ளித்­தி­ருந்­தனர். இரு முக­வர்கள் நேர்­முகப் பரீட்­சைக்கு சமூ­க­ம­ளிக்­க­வில்லை. நேர்­முகப் பரீட்­சையில் முக­வர்கள் பெற்­றுக்­கொண்ட புள்­ளி­களின் அடிப்­ப­டையில் கோட்டா  பகி­ரப்­ப­ட­வில்லை என்­பது கோட்டா பட்­டி­யலை  பரி­சீ­லித்த போது உறு­தி­யா­னது. தலா 79  புள்­ளிகள் பெற்­றுள்ள மூன்று முகவர் நிலை­யங்­க­ளுக்கு சம­மாக கோட்டா பகி­ரப்­ப­ட­வில்லை. 55, 30, 30 என்றே பகி­ரப்­பட்­டுள்­ளன.

மேலும் தலா 77 புள்­ளிகள் பெற்­றி­ருந்த மூன்று முகவர் நிலை­யங்­க­ளுக்கு கோட்டா 25,40,50 என வழங்­கப்­பட்­டுள்­ளமை  குறிப்­பி­டத்­தக்­க­தாகும். மற்றும் தலா 59 புள்­ளிகள் பெற்­றுக்­கொண்ட மூன்று முகவர்  நிலை­யங்­க­ளுக்கு 10, 25, 15 என பகி­ரப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு கோட்டா முறை­கே­டாக சொந்த விருப்பு வெறுப்­பு­களின் அடிப்­ப­டையில் பகி­ரப்­பட்­டுள்­ள­தாக செரண்டிப் ஹஜ் உம்ரா முகவர்  சங்­கத்தின் தலைவர் எம்.எஸ்.எச். முஹம்மத் குற்றம் சுமத்­தி­யுள்ளார்.
இதே­வேளை காரி­யா­லய வச­திகள் எது­வு­மற்ற புடவைக் கடை­யொன்றில் இயங்கி வரும் ஒரு முகவர் நிலை­யத்­துக்கு நேர்­முகப் பரீட்­சையின் போது 79 புள்­ளிகள் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. இந்த ஹஜ் முகவர்  நிலையம் உல்­லாச பயண சபை மற்றும் IATA அனு­மதிப் பத்­தி­ரங்­களைக் கூட பெற்­றி­ருக்­க­வில்லை. இந்­நி­லையில் இம்­மு­கவர்  நிலை­யத்­துக்கு நேர்­முகப் பரீட்­சையில் 79 புள்­ளிகள் வழங்­கப்­பட்டு 30 கோட்­டாக்கள் வழங்­கப்­பட்­டுள்­ள­மையை எவ்­வாறு நியா­யப்­ப­டுத்­தலாம் என செரண்டிப் ஹஜ் உம்ரா முகவர் நிலை­யத்தின் தலைவர் முஹம்மத் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

முறை­யற்ற நேர்­முகப் பரீட்சை


நேர்­முகப் பரீட்சை நடத்­து­வ­தற்கு முன்பே இர­க­சி­ய­மான முறையில் முக­வர்­க­ளுக்கு கோட்டா ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. அதன்­பின்பு நேர்­மு­கப்­ப­ரீட்சை நடத்­தப்­பட்டு ஒதுக்­கீடு செய்­யப்­பட்ட கோட்­டாக்­க­ளுக்கு அமை­வாக புள்­ளிகள் இடப்­பட்­டுள்­ளன எனவும் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

நேர்­மு­கப்­ப­ரீட்சை நடத்­திய குழு உறுப்­பி­னர்­க­ளாக முஸ்லிம் சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ளரின் நண்­பர்கள் நால்வர் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் பணிப்­பா­ள­ருக்கு எதி­ராக செரண்டிப் முக­வர்கள் சங்கம் கை நீட்­டி­யுள்­ளது.

புள்­ளிகள் குறை­வாக பெற்­றுக்­கொண்ட சில அர­சி­யல்­வா­தி­களின் நண்­பர்­க­ளான ஹஜ் முக­வர்கள் அர­சி­யல்­வா­திகள் மூலம் இணைத்­த­லை­வரைத் தொடர்பு கொண்டு கோட்­டாவை அதி­க­ரித்துக் கொண்­டுள்­ளார்கள் எனவும் பகி­ரங்­க­மாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

எக்சன்ட் முகவர் நிலையம்


கட்­டு­கஸ்­தோட்டை - மட­வளை வீதியில் இயங்கி வரும் எக்சன்ட் இன்டர் நெசனல் ஹஜ் உம்ரா நிலை­யத்தின் தலைவர் எம்.எஸ். ரியாஸ் அஹமட் தனக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தியை கவ­லை­யுடன் விடி­வெள்­ளிக்கு தெரி­வித்தார்.

இவர் கடந்த 7 வரு­டங்­க­ளாக உம்ரா சேவையை நடத்தி வரு­பவர். இவ­ருக்கு திணைக்­களம் 2011 ஆம் ஆண்டு ஹஜ் முகவர் அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கி­யது. 2013 ஆம் ஆண்டு இவ­ருக்கு 5 ஹஜ் கோட்­டாவும் வழங்­கப்­பட்­டது. ஆனால் இவ்­வ­ருடம் இவ­ருக்கு கோட்டா வழங்­கப்­ப­ட­வில்லை. நேர்­மு­கப்­ப­ரீட்­சையின் போது ஹஜ் ஏற்­பா­டு­களில் அனு­பவம் என்­ப­தற்­கான புள்­ளிகள் ஒன்று கூட வழங்­கப்­ப­ட­வில்லை  0 என்றே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவர் நேர்­மு­கப்­ப­ரீட்­சையில் பெற்­றுக்­கொண்ட மொத்­தப்­புள்­ளிகள் 45 ஆகும்.

இது தொடர்­பாக ரியாஸ் அஹமட் புத்­த­சா­சன மற்றும் மத அலு­வல்கள் அமைச்சின்  செய­லாளர் புத்­த­சா­சன மற்றும் மத அலு­வல்கள் அமைச்சர் மற்றும் ஹஜ் குழு இணைத்­த­லைவர் எ.எச்.எம்.பௌசி முஸ்லிம் சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் எம்.எச்.எம்.ஸமீல் ஆகி­யோ­ருக்கு முறைப்­பா­டு­களை எழுத்து மூலம் அனுப்­பியும் இது­வரை எது­வித  பதிலும் அனுப்­பப்­ப­ட­வில்லை.

மில்­லியன் கணக்கில் செல­விடும் முகவர் நிலையங்கள் உயர் நீதிமன்றில் வழக்கு


தாக்கல் செய்துள்ள செரண்டிப் ஹஜ் உம்ரா முகவர்கள்  சங்கம் 70 முகவர் நிலையங்களின்  சார்பில் நீதியை நிலைநாட்ட களமிறங்கியது. இவர்களில் சுமார் 50 முகவர்கள் நீதிமன்றுக்கு சமூகமளித்திருந்தனர். இவர்கள் சுமார் 4 மில்லியன் ரூபாய்களை  சட்டத்தரணிகளுக்கும்  வழக்கு தொடர்பான நடவடிக்கைகளுக்கும்  செலவிட்டுள்ளனர்.

இதேவேளை 20 முகவர்களை உள்ளடக்கிய இலங்கை ஹஜ் உம்ரா முகவர்கள் சங்கமும் உயர்நீதிமன்றில் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தது. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஹஜ் கோட்டா பகிர்வு பட்டியலை நீதிமன்றம் அங்கீகரிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தது.

இம்முகவர் சங்கத்தின் அங்கத்தவர்களுக்கு ஆகக்கூடிய கோட்டா (85 முதல் 50 வரை) வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தமக்கு வழங்கப்பட்ட  கோட்டாக்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு விட்டதாகவும் அவற்றுக்கான காப்புறுதியையும் செலுத்தி விட்டதாகவும் இக்குழுவினர் தெரிவித்தனர்.

இம்முகவர் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட  கோட்டாக்கள் 85 லிருந்து 30 வரையிலான எண்ணிக்கையை புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் 35 – 18 க்குமிடையில் குறைக்கப்பட்டமை.

ஹஜ்குழு இணைத்தலைவர் பிரதியமைச்சர் காதர்


ஹஜ்குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ.காதர் ஹஜ் குழுவின் நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியே இருந்தார். ஹஜ்குழுவின் மற்றைய இணைத்தலைவரான சிரேஷ்ட அமைச்சர் எம்.எச்.எம்.பௌசி தன்னை புறக்கணித்து தன்னிச்சையாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தினார்.

நான் ஹஜ் குழுவின் இணைத் தலைவர்களில்  ஒருவராக இருந்தும் கோட்டா பகிர்ந்தளிப்பது தொடர்பான கலந்துரையாடல்களுக்கு என்னை எவரும் அழைக்கவில்லை. இணைத்தலைவர்களில் ஒருவன் என்ற வகையில் என்னையும் உள்ளடக்கியே தீர்மானங்கள் எடுத்திருக்க வேண்டும். இது என்னை பழிவாங்கிய நடவடிக்கையாகும்.

இம்முறை கோட்டா உரிய முறையில் பகிரப்படாமையே நீதிமன்றம் வரை செல்ல வேண்டியதாக அமைந்தது. கோட்டா அதிகமாக பெற்றுவரும் முகவர்களுக்கே அதிகமாக  வழங்கப்பட வேண்டுமென்பது நியதியல்ல. கோட்டாக்கள் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும்.

ஹஜ் ஏற்பாடுகளில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை தலையிட்டிருக்க வேண்டும். இது முஸ்லிம்களின் புனித கடமையும் இறுதிக் கடமையுமாகும். பள்ளிவாசல் கடமைகளைக் கவனிப்பது மாத்திரம் உலமா சபையின் கடமையாக  இருக்கக்கூடாது. சமூகத்தின் சமய விடயங்களில் எங்கெல்லாம் அநீதிகள் விளைவிக்கப்படுகின்றதோ அவற்றுக்கெல்லாம் உலமா சபை குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பிரதியமைச்சர் காதரின் வேண்டுகோள் வரவேற்கத்தக்கதாகும்.


செரண்டிப் முகவர்கள் சங்கத் தலைவர் முஹம்மத்


கடந்த பல வருடங்களாக ஹஜ் கோட்டா பகிர்வில் இடம்பெற்ற அநீதிகளுக்கு  நீதி கிடைத்து விட்டது. இந்த நீதியை செரண்டிப் ஹஜ் உம்ரா முகவர்கள் சங்கம் மில்லியன் கணக்கான ரூபாய்களைச் செலவழித்து பெற்றுக்கொண்டுள்ளது.

கோட்டாக்களை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நாங்கள் போராடவில்லை. காலா காலமாக ஹஜ் விவகாரங்களில் இடம்பெறும் அநீதிகள் களையப்பட வேண்டும் என்பதற்காகவே போராடினோம். இது எமது நேர்மைக்கு கிடைத்த வெற்றியாகும் என்று உயர்நீதிமன்ற வளாகத்துக்கு வெளியேயிருந்து கருத்து வெளியிட்டார்.

எதிர்கால ஹஜ் ஏற்பாடுகள்


இவ்வருட ஹஜ் கோட்டா பகிர்வுகள் வேற்று சமயத்தவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஹஜ் விவகாரத்திலுள்ள தில்லுமுல்லுகளை ஜனாதிபதியும் பிரதமரும் நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றார்கள். ஹஜ் முகவர்களின் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் இலாபம் மீட்டுவதில் அவர்களுக்குள்ள அபரிமிதமான அவா என்பன நாட்டின் தலைவரை சிந்திக்க வைத்துள்ளது.

ஹஜ் ஏற்பாடுகளை அரசாங்கமே கையேற்க வேண்டும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் கையேற்பதன் மூலம் ஹஜ் விவகாரத்தை ஊழலின்றி தொடர முடியுமா என்பது சந்தேகத்துக்குரியது.
ஹஜ் முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஒரு சிலர் ஹஜ் கோட்டா பெற்றுக்கொள்வதில் தமது மேலாதிக்கத்தை செலுத்தி வந்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். இவர்கள் தாம் சொகுசு வசதிகள் வழங்குதாக கூறி இலட்சக்கணக்கான ரூபாய்களை ஹஜ் கட்டணமாக அறவிட்டு வயிறு வளர்த்து வருகின்றார்கள். குறிப்பிட்ட இவ்வாறான ஹஜ் முகவர்கள் இதனை ஒரு புனித பணியாக கருத வேண்டும்.  கொள்ளை இலாபம் ஈட்டும் வர்த்தகமாக நோக்கக்கூடாது. இவ்வாறான நோக்கம் இருக்கும் வரை அல்லாஹ் அந்நியர்களின் கரங்களினாலேயே ஹஜ் விவகாரத்தை விட்டு வைப்பான் என்பது  நான் சொல்லி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியதில்லை.

கொள்ளையடிக்கும் ஹஜ் முகவர்களும் நீதமாக நடந்து கொள்ளாதவர்களுக்கும் இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும் அல்லாஹ் தண்டனை வழங்குவான்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham