இந்து - பெளத்த மதங்களை பாதுகாப்பதற்கான பெளத்த இந்து தர்ம பாதுகாப்பு சபை உதயமானது. பொதுபலசேனாவும் அகில இலங்கை இந்து சம்மேளனமும் இணைந்து இவ்வமைப்பை உருவாக்கியுள்ளது.
இதற்கான உடன்பாடு பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் இந்து சம்மேளனத்தின் தலைவர் அருண் காந்துக்குமிடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மத மாற்றத்தை எதிர்த்து தமிழ் இந்துக்கள் எழுச்சி பெற வேண்டிய காலம் வந்து விட்டது.
பெளத்தர்களோ இந்துக்களோ தமது மதத்திற்கு முஸ்லிம்களையோ கிறிஸ்தவர்களைவோ மாற்றவில்லை. மாறாக அடிப்படைவாத முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களுமே இந்துக்களையும் பெளத்தர்களையும் மதமாற்றம் செய்கின்றனர்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பொதுபலசேனாவின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனிய நந்த தேரர் மற்றும் இந்து சம்மேளனத்தின் செயலாளர் எம். முரளீதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Post a Comment