ஓஸ்மானியாவில் அரசியல்; அதிபருக்கு இடமாற்றம்

Tuesday, August 26, 20140 comments



யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக்கல்லூரியின் அதிபர் எம்.முபாறக் உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ் வலயக்கல்வி அலுவலகத்திற்கு ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக குறித்த பாடசாலையின் கல்வி நிலை மோசமான நிலையில் இருப்பதாக கூறி தலையிட்ட ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அதிபரை உடனடியாக இடமாற்றஞ் செய்யப்போவதாக அங்கு நடத்திய கூட்டமொன்றில் அறிவித்துமிருந்தார். அதன் படியே தற்போதைய அதிபர்; எம்.முபாறக் உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ் வலயக்கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். அங்கு அவரிற்கான பணிகள் ஏதும் ஒதுக்கி வழங்கப்படாது வெறுமனே அமரவைக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகின்றது.

யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு பௌதீக வளங்கள் பலவற்றை இழந்த இப்பாடசாலை மீளக்கட்டி எழுப்பப்பட்டு அதிபர் எம்.முபாறக் தலைமையில் 2003 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லீம்களை மீள திரும்பலாமென புலிகள் அறிவித்திருந்ததை அடுத்தே மக்கள் முஸ்லீம் பகுதிகளில் மீள குடியமர தொடங்கியிருந்தனர்.

1990 ம் ஆண்டு கோட்டை முகாம் மீதான புலிகளது தாக்குதலையடுத்து அரச விமானப்படை குறித்த பாடசாலை சூழலிலும் தாக்குதல்களை நடத்தியிருந்தது. அத்துடன் பாடசாலை சூறையாடப்பட்டுமிருந்தது. அவ்வகையில் குறித்த பாடசாலையினை முழுமையாக கடந்த 12 வருடங்களாக கட்டியெழுப்பியவரே இடமாற்றம் செய்யப்பட்ட அதிபர் முபாரக் என முஸ்லீம் தரப்புக்கள் கூறுகின்றன.

இந்நிலையில் தொடர்ச்சியாக பிரயோகிக்கப்பட்டு வந்த அழுத்தங்களையடுத்து அமைச்சர் றிசாத்தின் அடைக்கலத்தில் அவர் பதவியை தக்க வைத்திருந்தார். இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நெருக்கமான சுபியானின் முறைபாடுகளை அடுத்தே றிசாத் பதியுதீனின் ஆதவாளரான தற்போதைய அதிபர் வெளியே அனுப்பப்பட்டுள்ளார்.

இதனிடையே பாடசாலையின் சகல தேவைகளையும் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதிக்கு முதல் நிறைவேற்றி தருவதாகவும் உடனடியாக அவற்றை செயற்படுத்தி நடைமுறைப்படுத்துமாறு ஆளுநர் அதிகாரிகளிற்கு பணித்தாக யாழ் மாநகர சபை உறுப்பினரும்,யாழ் போதனா வைத்தியாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினருமான பி.எஸ் எம். சுபியான் தெரிவித்தார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham