தேல்வியின் அச்சத்தால் அரசு எமது அலுவலகங்களை தாக்குகின்றனர் - ஐ.தே.க
Monday, August 25, 20140 comments
அரசாங்கம் ஊவா மாகாண சபை தேர்தலின் மீதுள்ள தோல்வி அச்சம் காரணமாக ஐ.தே.கட்சியின் காரியாலயங்களை தாக்குவதாக அக்கட்சியின் ஊடக பேச்சாளரும் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக குற்றம் சுமத்தினார்.
மேலும், காபட் பாதைகளை நிர்மாணித்து அரசின் குறைகளை அரசு மூடி மறைக்கிறது. இந்நிலையில் அரசாங்கம் எதனை செய்தாலும் வரலாற்று பூர்வமான வெற்றியை ஐ.தே.கட்சி பெறுவது நிச்சயம் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
இது தொடர்பில் ஐ.தே.க தலைமையகமான சிறி கொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஊவா மாகாண தேர்தலை மையப்படுத்தி மேலும் இரண்டு பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஊவா மாகாண சபை தேர்தலில் ஐ.தே.கட்சி வரலாற்று பூர்வமான வெற்றி பெறும். எனவே, அரசு தனது தோல்விக்கு அஞ்சி ஐ.தே. கட்சி காரியாலயங்களை தாக்குவதாக கயந்த கருணாதிலக குற்றம் சுமத்தினார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment