உள்ளாடை கடைகளுக்கு சீல் வைப்பு!
Monday, August 25, 20140 comments
சவூதி அரேபியாவில் ஆண்கள் பணிபுரியும் பெண்களுக்கான உள்ளாடை கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான உள்ளாடை கடைகளில் பெண்களை மட்டுமே வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும் என்று கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம் சவூதி அரசு உத்தரவிட்டது.
ஆனால் ஆண் பணியாளர்களை மாற்றி பெண் பணியாளர்களை நியமிக்க போதிய கால அவகாசம் தேவை என கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற அரசு, கால அவகாசம் அளித்தது. இதனையடுத்து பல கடைகளில் பணியாற்றி வந்த ஆண்களுக்கு பதில் பெண்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த உத்தரவை முழுமையாக நடைமுறைப்படுத்தாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்க சவூதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் பல பெண்களுக்கான உள்ளாடை கடைகளில் ஆண்கள் பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, அரசின் உத்தரவை மீறிய கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment