மொனராகலை, பிபில தேர்தல் தொகுதிகளில், நேற்றையதினம் 18 கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
அலுவலகத்திற்குள் ஆயுதங்களுடன் நுழைந்த சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதோடு, பிரதேசத்திலுள்ள வேட்பாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளதாகவும் அந்த அமைப்புக் கூறியுள்ளது.
13 ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகங்கள், நான்கு மக்கள் விடுதலை முன்னணி அலுவலகங்கள் மற்றும் ஒரு ஜனநாயக மக்கள் கட்சி அலுவலகமும், இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி சேதமடைந்துள்ளதாக கொபே வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை முதல் சுமார் ஆறு மணித்தியாலங்களுக்குள் தொடர்ச்சியாக இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது என அந்த அறிக்கை மேலும் கூறுகின்றது.
இதேவேளை, பிபில - மொனராகலை வீதியிலுள்ள கணுல்வல ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தின் உரிமையாளர் வீட்டிற்கு சென்ற சிலர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண சபை தேர்தல் ஆரம்பமானது முதல் தற்போது வரை 74 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதில் நேற்றையதினமே அதிக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் கொபே வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐ.தேக.வின் 13 காரியாலயங்கள் உட்பட 18 அலுவலக்கள் அரச தரப்பினரால் தாக்குதல் - கபே
Monday, August 25, 20140 comments
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment