ஐ.ம.சு.மு மாகாணசபை உறுப்பினர் இம்தியாஸ் காதர் பிணையில் விடுதலை
Tuesday, August 19, 20140 comments
அனுமதிபத்திரமின்றி துப்பாக்கியை வைத்திருந்ததாக கூறப்படும் சப்ரகமுவ மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரான இம்தியாஸ் காதர், 25 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் கேகாலை நீதவான் பிரசன்ன அல்விஸினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத ஆயுதங்களுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டு இன்று காலை அவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
உறுப்பினர் தான் நிரபராதி என்று நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இதனையடுத்து மனுமீதான விசாரணையை ஒக்டோபர் 17 ஆம் திகதி எடுப்பதாக நீதவான் பணித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment