முஸ்லிம்களுக்கு சாதகமான பிரேரணையை அரசுடன் மு.கா, அ.இ.ம.கா. இணைந்து தோற்கடிப்பு
Tuesday, August 19, 20140 comments
மேல் மாகாண சபையில் வீடுகள் உடைத்தல் மற்றும் வியாபார நிலையங்களை அகற்றி அவற்றை அபகரிக்கும் அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி இன்று மேல்மாகாண சபையில் பிரேரணையொன்றை கொண்டு வந்தது.
கொழும்பில் பெரும்பாலும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகளும் கடைகளுமே உடைக்கப்படுகின்றன. இதற்கு நட்டஈடு சரியான முறையில் வழங்கப்படுவதும் இல்லை. இந்நிலையில் இது தொடர்பிலான பிரேரணையொன்று மேல்மாகாண சபைக்கு கொண்டுவரப்பட்டபோது அதனை அரசு கடுமையாக எதிர்த்து தோற்கடித்தது. இதற்கு முஸ்லிம் கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன எதிர்த்து வாக்களித்து மக்களை காட்டிக்கொடுத்துள்ளன.
கடந்த மேல் மாகாண சபைத் தேர்தலின் கொழும்பு முஸ்லிம்களையும் அவர்களின் வீடுகளையும் வர்த்தகத்தையும் பள்ளிவாசலையும் குர்ஆனையும் பாதுகாப்போம் என்று கூறி மக்களை உணர்ச்சி வசப்படுத்தி வாக்குவேட்டையாடிய முஸ்லிம் கட்சிகள் இன்று முஸ்லிம்களின் வீடுடைப்பு விடயத்தில் சுயாதீனமாக முடிவெடுக்காது அரசின் கரத்தை பலப்படுத்தியிருக்கிறது.
இந்த பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சி, ஜனநாயக கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியன ஆதரவளித்திருந்தன. இந்நிலையில் மு.கா மற்றும் அ.இ.ம.கா ஆகியன ஆதரவளித்திருந்திருந்தால் வெற்றிபெற செய்ய முடிந்திருக்கும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இது தொடர்பான விவாதத்தில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கலந்துகொண்டு முஸ்லிம்களின் இருப்பிட மற்றும் தொழில் பிரச்சினை தொடர்பில் உரையாற்றினார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment