ஊவா தேர்தல் பிரசாரத்தில் ரணில், கரு, சஜித் ஒரே மேடையில்
Sunday, August 17, 20140 comments
ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களான ரணில் விக்கிரம சிங்க கரு ஜயசூரிய சஜித் பிரேமதாச ஆகியோர் ஒரே மேடையில் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக ஐ.தே.கட்சி இரத்தினபுரி மாவட்ட உறுப்பினர் தலதா அத்துகோறளை தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி ஊவா மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் பல வியூகங்களை வகுத்துள்ளது. இதில் ஒரு அம்சமாக அக் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஒரே மேடையிலிருந்து பிரசாரத்தை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஐ.தே. கட்சிக்குள் உட்பூசல்கள் நிலவுவதாகவும் தலைமைத்துவ போட்டியால் ஆட்சி பல கூறுகளாக பிரித்து கிடப்பதாகவும் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகளை முறியடிக்கும் வகையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கியுள்ளது. இதற்கு பேச்சாளரான இவர் ஊவா மாகாண சபையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை கைப்பற்றுவர் என நம்பலாம். இவருக்கு பக்க பலமாக ஐக்கிய தேசியக் கட்சி முக்கிய தலைவர்கள் ஊவா மாகாணத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோர் என்றும் தலதா அத்துகோறளை எம்.பி. தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment