இந்திய முஸ்லிம்கள் இருவர் கொழும்பில் கைது
Wednesday, August 27, 20140 comments
பாராளுமன்ற கட்டிடம் உட்பட இலங்கையின் முக்கிய இடங்கள் சிலவற்றின் புகைப்படங்களை வைத்திருந்த இந்திய முஸ்லிம்கள் இருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொழும்பு முகத்துவாரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் வைத்திருந்த மடிக்கணணி மற்றும் புகைப்படக்கருவி ஆகியவற்றை சோதனை செய்த வேளை பாதுகாப்பு வலயத்திற்குள் அடங்கும் முக்கிய கட்டிடங்களின் படங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சென்னையை சேர்ந்த இருவரும் முகத்துவாரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் தற்போது மேலதிக விசாரணைக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment